பாரதரத்னா விருதுகள் வழங்கல்.. அத்வானிக்கு வீடு தேடிச்செல்லும் விருது..?

நாட்டின் உயரிய விருதான பாரத ரத்னா விருதை தமிழ்நாட்டைச் சேர்ந்த வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் உள்ளிட்ட 4 பேருக்கு குடியரசுத்தலைவர் திரவுபதி முர்மு வழங்கினார்.

Mar 30, 2024 - 12:18
பாரதரத்னா விருதுகள் வழங்கல்.. அத்வானிக்கு வீடு தேடிச்செல்லும் விருது..?

நாட்டின் உயரிய விருதான பாரத ரத்னா விருதை தமிழ்நாட்டைச் சேர்ந்த வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் உள்ளிட்ட 4 பேருக்கு குடியரசுத்தலைவர் திரவுபதி முர்மு வழங்கினார். 

சமூக வளர்ச்சி, சீர்திருத்தம் உள்ளிட்ட பணிகளில் ஈடுபடுவோருக்கு பாரத ரத்னா விருதுகளை மத்திய அரசு வழங்கி வருகிறது. மக்களவைத் தேர்தல் நெருங்கும் நிலையில், முன்னெப்போதும் இல்லாத வகையில் இந்த ஆண்டு 5 தலைவர்களுக்கு பாரத ரத்னா அறிவிக்கப்பட்டது. அதன்படி மறைந்த முன்னாள் பிரதமர்களான சவுத்ரி சரண்சிங் மற்றும் பி.வி.நரசிம்மராவ், தமிழ்நாட்டைச் சேர்ந்த வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன், பீகார் முன்னாள் முதலமைச்சர் கர்பூரி தாகூர், பாஜக மூத்த தலைவர் அத்வானி ஆகிய 5 பேருக்கு பாரத ரத்னா விருதுகள் அறிவிக்கப்பட்டன.

இந்நிலையில் டெல்லியில் உள்ள ராஷ்டிரபதிபவனில், பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்டோர் முன்னிலையில் குடியரசுத்தலைவர் திரவுபதி முர்மு பாரத ரத்னா விருதுகளை வழங்கினார். அதன்படி பீகார் முன்னாள் முதலமைச்சர் கர்பூரி தாகூருக்கான விருதை அவரது மகன் ராம்நாத் தாகூர் பெற்றுக்கொண்டார்.

தொடர்ந்து வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதனுக்கான பாரத ரத்னா விருதை அவரது மகள் நித்யா ராவுக்கு குடியரசுத்தலைவர் திரவுபதி முர்மு வழங்கினார். மறைந்த முன்னாள் பிரதமர் சவுத்ரி சரண் சிங்குக்கான விருது அவரது பேரன் ஜெயந்த் சிங்குக்கும், மறைந்த முன்னாள் பிரதமர் பி.வி.நரசிம்ம ராவுக்கான விருது அவரது மகன் பி.வி.பிரபாகர் ராவுக்கும் வழங்கப்பட்டது.

இந்நிலையில் வயது மூப்பு காரணமாக பாஜக மூத்த தலைவர் அத்வானிக்கான பாரத ரத்னா விருது வீடு தேடி வழங்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow