சென்னையில் பன்னாட்டு புத்தகத்திருவிழா: ஜனவரி 16 முதல் 3 நாட்கள் நடக்கிறது

சென்னை பன்னாட்டு புத்தகத் திருவிழா இலச்சினையை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வெளியிட்டார். சென்னை பன்னாட்டு புத்தகக் கண்காட்சி ஜனவரி 16 முதல் 18 வரை 3 நாட்கள் நடைபெறுகிறது. சென்னை பன்னாட்டு புத்தகக் கண்காட்சியில் 100 நாடுகள் பங்கேற்க உள்ளன; 120 புத்தகங்கள் வெளியிடப்பட உள்ளன.

சென்னையில் பன்னாட்டு புத்தகத்திருவிழா: ஜனவரி 16 முதல் 3 நாட்கள் நடக்கிறது
Chennai International Book Festival

இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் அன்பில் மகேஸ் பேசுகையில், ”சென்னை கலைவாணர் அரங்கில் பன்னாட்டு புத்தக் காட்சி நடைபெறவுள்ளது. வரும் ஜனவரி, 16,17,18 ஆகிய தேதிகளில் பன்னாட்டு புத்தக் காட்சி நடைபெறும்” என்று தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் தன்னுடைய எக்ஸ் தளப் பதிவில், “சென்னை பன்னாட்டுப் புத்தகத் திருவிழா 2026 - ஜனவரி 16 முதல் 18 வரை, சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெறவுள்ளது என்பதை பெருமகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்கிறோம். இந்த நான்காவது ஆண்டில் தனித்துவமான B2B தளம் செயல்படவுள்ளது.

இதன்மூலம் பதிப்பாளர்கள், மொழிபெயர்ப்பாளர்கள், இலக்கிய முகவர்கள் நேரடியாக கலந்துரையாடி காப்புரிமை மற்றும் இலக்கியப் பரிமாற்றங்களை மேற்கொள்ளலாம்.

பொதுமக்கள் பங்கேற்கும் சிறந்த தளமாக B2B அமையும்! இந்தாண்டு மதிப்புறு விருந்தினராக Frankfurt Book Fair ஒருங்கிணைப்புக் குழு அழைக்கப்பட்டுள்ளது.கலந்துரையாடல்கள், கண்காட்சிகள், கலாசார நிகழ்ச்சிகளும் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன. 

மாணவர்கள், வாசகர்கள், எழுத்தாளர்கள், இலக்கிய ஆர்வலர்கள் என அனைவரையும் அன்போடு அழைக்கிறோம். தமிழை உலக அரங்கிற்கு எடுத்துச் செல்வோம்! உலக இலக்கியங்களைத் தமிழுக்குக் கொண்டு வருவோம்!” என்று குறிப்பிட்டுள்ளார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow