சென்னை விமானநிலையம் டூ விம்கோ நகர் மெட்ரோ ரயில் : நடுவழியில் நின்றதால் பயணிகள் பரிதவிப்பு  

சென்னை விமான நிலையத்தில் இருந்து விம்கோ நகர் நோக்கி வந்த மெட்ரோ ரயில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக நடுவழியில் பழுதானது. பயணிகள் என்ன செய்வது என தெரியாமல் பரிதவித்தனர். 

சென்னை விமானநிலையம் டூ விம்கோ நகர் மெட்ரோ ரயில் : நடுவழியில் நின்றதால் பயணிகள் பரிதவிப்பு  
Chennai Airport to Wimco Nagar Metro Rail

இன்று காலை வழக்கம் போல சென்னை விமான நிலையத்தில் மெட்ரோ ரயிலில் விம்கோ நகர் நோக்கி பயணம் மேற்கொண்டனர். திடீர் என மெட்ரோ ரயிலில் இருந்து மின்சாரம் துண்டிக்கப்பட்ட நிலையில், இதில், 20 மேற்பட்டோர் உள்ளே இருந்தனர். சுரங்கத்துக்குள் மெட்ரோ ரயில் சிக்கியதால் பலரும் அவதிக்குள்ளாகினர்.

இதனால் மெட்ரோ ரயில் இருந்த பயணிகள் பதற்றம் அடைந்தனர்.  அதனைத் தொடர்ந்து தொழில்நுட்பக் கோளாறு சரி செய்யப்பட்ட நிலையில், மெட்ரோ ரயில்கள் வழக்கம் போல் இயக்கப்பட்டு வருகின்றன. இதனால் பயணிகள் நிம்மதி பெருமூச்சுவிட்டனர்.

மெட்ரோ ரயில் சுரங்க பாதையில் சிக்க கொண்ட விவகாரம் தொடர்பாக சென்னை மெட்ரோ நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில், “ உயர்நீதிமன்ற மெட்ரோ நிலையத்திற்கும் சென்ட்ரல் மெட்ரோ நிலையத்திற்கும் இடையில் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ரயில் நிறுத்தப்பட்டது. மேலும், கோளாறு சரிசெய்யப்பட்டு காலை 6.20 மணிக்கு வழக்கமான செயல்பாடுகள் மீண்டும் தொடங்கின” எனக் குறிப்பிட்டுள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow