தலைமறைவான ஜாபர் சாதிக்! - பூட்டை உடைந்து அதிரடியாக நுழைந்த போலீசார்
ஜாபர் சாதிக் தலைமறைவானதை அடுத்து, அவரது வீட்டின் பூட்டை உடைத்து மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் சோதனை மேற்கொண்டுள்ளனர்.
டெல்லியில், கடந்த சில தினங்களுக்கு முன் போதைப் பொருள் தடுப்பு போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் 50 கிலோ போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. கடத்தலில் ஈடுபட்டதாக 3 பேரை கைது செய்த நிலையில் அவர்கள் தமிழகத்தை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது. இந்த கடத்தல் பின்னணியில், தமிழ் சினிமா திரைப்பட தயாரிப்பாளரான ஜாபர் சாதிக், நடிகர் மைதீன், அரசியல் பிரமுகர் சலீம் ஆகியோர் மூளையாக செயல்பட்டதும் விசாரணையில் அம்பலமானது.
ஜாபர் சாதிக் திமுகவின் சென்னை மேற்கு மாவட்ட அயலக அணி துணை அமைப்பாளராக இருந்த நிலையில், அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்பிலிருந்து நிரந்தரமாக நீக்கி வைக்கப்படுவதாக திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவித்தார்.
கடத்தல் சம்பவம் தொடர்பாக, வழக்கு பதியப்பட்டு விசாரணை தொடங்கியது முதல், ஜாபர் சாதிக் ஜாபர் சாதிக் தலைமறைவாக இருந்து வருகிறார். அவரை தேடும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், ஜாபர் சாதீக் வீட்டின் பூட்டை உடைத்து மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் சோதனை மேற்கொண்டனர்.
ஜாபர் சாதீக் அவரது சகோதரர் சலீம், மைதீன் ஆகிய மூவரும் தொடர்ந்து குடும்பத்தோடு தலைமறைவாக உள்ள நிலையில் மைலாப்பூர், சாந்தோம் பகுதியில் உள்ள அவரது வீட்டின் பூட்டை உடைத்து நேற்று மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் சோதனை மேற்கொண்டுள்ளனர்.
முன்னதாக, கடந்த பிப்ரவரி 26ஆம் தேதி நேரில் ஆஜராகாத காரணத்தால் டெல்லி போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார், ஜாபர் சாதிக் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டுமென அவரது வீட்டில் சம்மன் ஒட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.
What's Your Reaction?