காட்டுமன்னார்கோயிலில் முதல்வர் சிறப்பு முகாம் திட்டம்

பேரூராட்சிக்கு உட்பட்ட 1 முதல் 18 வார்டுகள் வரை பொதுமக்களின் குறைகளை தீர்க்கும் வகையில் மக்களுடன் முதல்வர் என்ற சிறப்பு முகாம்

Dec 19, 2023 - 15:14
Dec 19, 2023 - 17:18
காட்டுமன்னார்கோயிலில் முதல்வர் சிறப்பு முகாம் திட்டம்

முதல்வர் சிறப்பு முகாம் திட்டத்தை காட்டுமன்னார்கோயில் சட்டமன்ற உறுப்பினர் சிந்தனைச்செல்வன் துவக்கி வைத்தார்

காட்டுமன்னார்கோயில் பேரூராட்சிக்கு உட்பட்ட 1 முதல் 18 வார்டுகள் வரை பொதுமக்களின் குறைகளை தீர்க்கும் வகையில் மக்களுடன் முதல்வர் என்ற சிறப்பு முகாம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.இதனை சட்டமன்ற உறுப்பினர் சிந்தனைச்செல்வன் துவங்கி வைத்தார்.

பொதுமக்கள் அதிகமாக அணுகும் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை, நகராட்சி நிர்வாகத்துறை, ஊரக வளர்ச்சித்துறை, ஆதி திராவிடர் நலத்துறை, பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, சமூக நலத்துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, கூட்டுறவுத்துறை, மகளிர் மேம்பாட்டு கழகம், வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை, எரிசக்தி துறை, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை, உள்ளிட்ட துறை அதிகாரிகள் பார்வையிட்டு சம்பந்தப்பட்ட மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

மேலும் நிகழ்ச்சியில் திமுக பேரூராட்சி மன்ற தலைவர் கணேசமூர்த்தி, மணிமாறன், ராமலிங்கம்,கண்ணன்,சொர்ணம் அறிவு,விசிக நிர்வாகிகள் நகர செயலாளர் நாகராஜ்,நகர பொருளாளர் கஸ்பா பாலா,அந்தோணி சிங், வெற்றிவேந்தன்,மதி உள்ளிட்ட விசிக பிரமுகர்கள் ஏராளமான கலந்து கொண்டனர்

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow