வெள்ள பாதிப்புகளை சீர்செய்ய சிவகங்கையில் இருந்து தூய்மைபணியாளர்கள் பயணம்

வெள்ள பாதிப்புகளை சீர் செய்ய சிவகங்கை மாவட்டத்தில் இருந்து நகராட்சி துப்புரவு பணியாளர்கள் நெல்லை, தூத்துக்குடி உட்பட நான்கு மாவட்டங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டனர்.

Dec 19, 2023 - 12:01
Dec 19, 2023 - 16:56
வெள்ள பாதிப்புகளை சீர்செய்ய சிவகங்கையில் இருந்து தூய்மைபணியாளர்கள் பயணம்

அதிகனமழையால் பாதிக்கப்பட்ட நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட 4 மாவட்டங்களில் துப்புரவு பணிகளை மேற்கொள்ள சிவகங்கை மாவட்டத்தில் இருந்து துப்புரவு பணியாளர்கள் பயணம் செய்துள்ளனர்.

கடந்த இரண்டு நாட்களாக நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய நான்கு மாவட்டங்களில் தொடர்ச்சியாக கன மழை பெய்து வருகிறது.இதனால் குடியிருப்பு பகுதிகள், பேருந்து, ரயில் நிலையங்கள், அரசு அலுவலகங்கள் உட்பட அனைத்து பகுதிகளிலும் வெள்ளநீர் சூழ்ந்து மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதாக பாதிக்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் தங்களது உடைமைகளை இழந்து தவித்து வரும் நிலையில்,தமிழக அரசு வெள்ள பாதிப்புகளை சீர் செய்ய போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.அதன் ஒரு பகுதியாக வெள்ள பாதிப்புகளை சீர் செய்ய சிவகங்கை மாவட்டத்தில் இருந்து நகராட்சி துப்புரவு பணியாளர்கள் நெல்லை, தூத்துக்குடி உட்பட நான்கு மாவட்டங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டனர்.

காரைக்குடி, சிவகங்கை, தேவகோட்டை நகராட்சிகளில் இருந்து சிறப்பு அலுவலர், சுகாதார ஆய்வாளர்கள் தலைமையில் சுமார் 60க்கும் மேற்பட்ட துப்புரவு பணியாளர்கள் அந்தந்த நகராட்சிகளில் இருந்து பேருந்துகளில் அனுப்பி வைக்கப்பட்டனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow