வடமாநிலங்களில் நிலஅதிர்வு.. அச்சத்தில் மக்கள்..
இமாச்சல பிரதேசத்தில் நேற்றிரவு (ஏப்ரல் 5) 9.34 மணிக்கு லேசான நிலநடுக்கம் ஏற்பட்டதால் பொதுமக்கள் அச்சமடைந்தனர்.
சம்பா பகுதியில் இருந்து சுமார் 100 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பகுதியிலும், மணாலி உள்ளிட்ட இடங்களிலும் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.3 ஆக பதிவாகி உள்ளதாகவும், நிலநடுக்கத்தின் மையம் சுமார் 10 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டிருந்ததாகவும் தேசிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கத்தால் பாங்கி பகுதி கிராமங்களில் தொலைத் தொடர்பு சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலநடுக்கத்தால் பெரிய அளவிலான பாதிப்புகள் மற்றும் உயிர் சேதம் ஏதும் ஏற்பட்டதா? என்பது குறித்து உடனடி தகவல்கள் வெளியாகவில்லை.
இமாச்சல பிரதேசத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் எதிரொலியாக பஞ்சாப், அரியானா உள்ளிட்ட வடமாநிலங்களில் உணரப்பட்டது.
கடந்த 3ஆம் தேதி தைவானில் 7.3 என்ற அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் காரணமாக கட்டிடங்கள் இடிந்து விழுந்த நிலையில் நேற்று ஜப்பானிலும் நிலநடுக்கம் ஏற்பட்டது.
இந்த நிலையில் இமாச்சல பிரசேதத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் வடமாநிலங்களில் வசிக்கும் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
What's Your Reaction?