கோவை கார் வெடிகுண்டு விபத்து விவாகாரம்: என்.ஜ.ஏ. அதிகாரிகள் தீடீர் சோதனை!

முக்கிய ஆவணங்களை கைப்பற்றி எடுத்துச் சென்ற அதிகாரிகள்..!

Feb 10, 2024 - 22:01
கோவை கார் வெடிகுண்டு  விபத்து விவாகாரம்: என்.ஜ.ஏ. அதிகாரிகள் தீடீர் சோதனை!

கோவை கார் வெடிகுண்டு வெடி விபத்து வழக்கு தொடர்பாக சென்னையில் 4 மணி நேரம் நடத்தி முக்கிய ஆவணங்களை கைப்பற்றி கையில் எடுத்துச் சென்ற என்.ஐ.ஏ. அதிகாரிகளால் பரபரப்பு ஏற்பட்டது.

கோவை கார் வெடிகுண்டு வெடி விபத்து வழக்கு தொடர்பாக சென்னையில் பல்வேறு இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் இன்று சனிக்கிழமை [10-02-2023] காலை முதல் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் ராமாபுரத்தில் உள்ள மஞ்சுநா தோட்டம் பகுதியைச் சேர்ந்த ஜாஃபர் அலி என்பவர் வீட்டில் காலை 7:00 மணி முதல் 10க்கும் மேற்பட்ட அதிகாரிகள் கையில் துப்பாக்கி ஏந்திய போலிசார் பாதுகாப்புடன் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

மேலும், 4 மணி நேரம் நடந்த இச்சோதனையில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் ஒரு சில முக்கிய ஆவணங்களை கைப்பற்றி கையில் எடுத்துச் சென்றனர். 

கார் வெடி விபத்து சம்பந்தமாக திடீரென எண்ணெய் அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு முக்கிய ஆவணங்களை கைப்பற்றி சென்ற சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிக்க   |  பள்ளி மாணவன் மீது போலீஸ் கொலைவெறி தாக்குதல்..!

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow