ஒருவழியாக வெளியானது காங்., வேட்பாளர் பட்டியல்.. 7 மட்டும் தானா? மீதி 2 எப்போ?

உட்கட்சி பூசல் வலுத்து சக காங்கிரஸ் கட்சியினரே கார்த்தி சிதம்பரம், ஜோதிமணிக்கு சீட் வழங்க எதிர்ப்பு தெரிவித்தனர்.

Mar 24, 2024 - 08:53
ஒருவழியாக வெளியானது காங்., வேட்பாளர் பட்டியல்.. 7 மட்டும் தானா? மீதி 2 எப்போ?

தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர்களை ஒருவழியாக காங்கிரஸ் வெளியிட்டிருக்கிறது. இருப்பினும் 7 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்துவிட்டு, நெல்லை, மயிலாடுதுறை தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிக்காமல் இருப்பது கட்சிக்குள் இருக்கும் கோஷ்டி மோதலை அப்பட்டமாகியுள்ளது அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது. 

தமிழ்நாட்டில் திமுவுடன் கூட்டணி வைத்துள்ள காங்கிரஸ், மக்களவைத் தேர்தலில் புதுச்சேரி உள்பட 10 தொகுதிகளை போட்டியிடுகிறது. திமுக மற்றும் அதன் கூட்டணியில் கட்சிகள் தங்களோட வேட்பாளர்களை அறிவித்த நிலையில், காங்கிரஸ் தலைமை மட்டும் தமிழக வேட்பாளர்கள் குறித்த விவரங்களை வெளியிடாமல் 3 கட்ட வேட்பாளர்களை அறிவித்திருந்தது.

திமுக கூட்டணியில் ஒதுக்கப்பட்ட கரூர், சிவகங்கை, திருவாரூர் போன்ற தொகுதிகளில், யாரை வேட்பாளராக நிற்க வைப்பது? எனக் குழப்பத்தில் காங்கிரஸ் தவித்தது. குறிப்பாக கார்த்தி சிதம்பரத்திற்கு சீட் வழங்கக்கூடாது என கட்சிக்குள்ளேயே குரல்கள் வலுத்தது. அதுமட்டுமல்லாமல், கார்த்தி சிதம்பரத்திற்கு சிவகங்கை தொகுதி வழங்கக் கூடாது என திமுக நிர்வாகிகள் சிலர் கூறியதாகவும், அதை மீறி திமுக தலைமை தொகுதியை ஒதுக்கியிருப்பதால் அவர்களின் ஆதரவை பெற முடியாமல் காங்கிரஸ் தவித்த வருகிறது. 

இதேநிலை தான் ஜோதிமணிக்கு கரூரில் ஏற்பட்டது, அங்கேயும் உட்கட்சி பூசல் வலுத்து சக காங்கிரஸ் கட்சியினரே ஜோதிமணிக்கு சீட் வழங்க எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால், தற்போது வெளியிடபட்டுள்ள 4ஆம் கட்ட வேட்பாளர் பட்டியலில் 7 தமிழக காங்கிரஸ் வேட்பாளர்கள் பெயர்கள் இடம்பெற்றுள்ளது. கரூரில் ஜோதிமணிக்கும், சிவகங்கையில் கார்த்திக் சிதம்பரத்திற்கும் சீட் வழங்கப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரியில் கே.கோபிநாத், கடலூரில் விஷ்ணு பிரசாத், விருதுநகரில் மாணிக்கம் தாகூர், கன்னியாகுமரியில் - விஜய் வசந்துக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 

ஸ்டார் தொகுதியாக மாறியுள்ள விருதுநகரில் தொடர்ந்து 3 முறை சிட்டிங் எம்பியாகவுள்ள மாணிக்கம் தாகூர், பாஜக சார்பாக ராதிகா சரத்குமாரையும், தேமுதிக சார்பாக விஜயபிரபாகரனையும் எதிர்கொள்கிறார். இதேவேளையில், திருவள்ளூர் தனித்தொகுதியில், எம்பி விஸ்வநாதனுக்கு வாய்ப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், காங்கிரஸின் சென்ட்ரல் வார் ரூம் தலைவரும், முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியான சசிகாந்த் செந்திலுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், மயிலாடுதுறையும், நெல்லையும் காங்கிரஸுக்கு புதிதாக ஒதுக்கப்பட்டிருக்கும் நிலையில் அங்கு இன்னும் வேட்பாளர்கள் அறிவிக்கப்படாமல் இழுப்பறி நீடிப்பதற்கு சில காரணங்கள் கூறப்படுகிறது. இதில் மயிலாடுதுறையில் பிரவீன் சக்கரவர்த்தி எம்பி சீட் வாங்க முயற்சித்து வருவதாகவும், அதே நேரத்தில் ஏற்கனவே எம்பியாக இருந்த மணிசங்கர் ஐயரும் மண்ணின் மைந்தன் என்று களத்தில் குதித்துள்ளதார், அதுமட்டுமில்லாமல் கடலூர் வாய்ப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நாசே ராமசந்திரனுக்கும் மயிலாடுதுறையாவது தாங்கள் என கேட்டுள்ளதால், காங்கிரஸ் கட்சிக்குள்ளேயே மும்முனை போட்டி நிலவுகிறது.

நெல்லையில், பாஜக சார்பாக Strong வேட்பாளராக சொல்லப்படுகிற நயினார் நாகேந்திரன் போட்டியிடுகிறார். இங்கு Strong வேட்பாளராக இருந்த திமுகவோட ஞானதிரவியத்துக்கு இம்முறை வாய்ப்பு மறுக்கப்பட்டிருக்கிறது. அதனால், காங்கிரஸ் தங்கள் சார்பாக Strong வேட்பாளரா களமிறக்கும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார்கள். இங்கு பொறுத்தவரை ராபர்ட் புரூஸுக்கும் பால்ராஜுக்கும் வாய்ப்பு வழங்கலாம்னு சொல்லப்படுகிறது.

தமிழகத்தை பொறுத்தவரை திமுக மற்றும் அதிமுக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு, பிரசாரம் தொடங்கப்பட்டுள்ள நிலையில், காங்கிரஸில் இழுப்பறி இன்னும் நீளுகிறது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow