பானை சின்னத்தை யாருக்கும் ஒதுக்கக் கூடாது... குலாலர் சாலிவாகணன் மக்கள் இயக்கத்தினர் கோரிக்கை...
தேர்தல் ஆணையம் பானை சின்னத்தை எந்த ஒரு அரசியல் கட்சிக்கும், சாதி அமைப்பிற்கும் தேர்தலில் போட்டியிடுவதற்கு சின்னமாக வழங்கக் கூடாது என குலாலர் சாலிவாகணன் மக்கள் இயக்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் செய்தியாளர்களை சந்தித்த அச்சங்கத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் அமுல்ராஜ், நாடாளுமன்ற தேர்தல், சட்டமன்றத் தேர்தல் எந்த தேர்தல் நடைபெற்றாலும் மண் பானை சின்னத்தை எந்த ஒரு அரசியல் கட்சிக்கும், சாதி அமைப்புக்கும், இயக்கத்திற்கும் அளிக்கக்கூடாது என வேண்டுகோள் விடுத்தார். ஏற்கனவே இது தொடர்பாக தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் அனுப்பிய நிலையில், தற்போது வரை எந்த ஒரு பதிலும் வராததால் மீண்டும் அழுத்தம் கொடுப்பதாகவும் அவர் கூறினார்.
அரசியல் கட்சியினர், ஆட்சியாளர்கள், தங்கள் சமூகத்தினரை புறக்கணிப்பதாகவும், சாதிவாதி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். மேலும் தேர்தலின் போது மண் பானை சின்னத்தை எதிர்க்கட்சியினர் இழிவாக பேசுகிறார்கள், இதனால் தங்கள் மனம் வேதனை அடைகிறது . நாங்கள் பானை செய்யும் முறை தெய்வமாக கருதுகிறோம் என்றும் அமுல்ராஜ் தெரிவித்தார். தங்களது கோரிக்கையும் மீறி தேர்தல் ஆணையம் பானை சின்னத்தை அரசியல் கட்சிகளுக்கு வழங்கினால், அதனை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார் .
What's Your Reaction?