டிஎன்பிஎஸ்சி-க்கு 5 புதிய உறுப்பினர்கள் நியமனம்..! யார் யார் தெரியுமா?

Feb 16, 2024 - 14:36
டிஎன்பிஎஸ்சி-க்கு 5 புதிய உறுப்பினர்கள் நியமனம்..! யார் யார் தெரியுமா?

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் புதிய உறுப்பினர்களாக ஓய்வு பெற்ற ஐஏஎஸ் சிவனருள், சரவணக்குமார் ஐஆர்எஸ், தவமணி எம்பிபிஎஸ் உள்ளிட்ட 5 பேரை நியமித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாடு அரசுத் துறைகளில் உள்ள காலி பணியிடங்கள் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) நடத்தும் போட்டித் தேர்வுகள் மூலம் நிரப்பப்பட்டு வருகின்றன. 

இந்நிலையில் டி.என்.பி.எஸ்.சிக்கு 5 புதிய உறுப்பினர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சிவனருள், ஐஆர்எஸ் அதிகாரி சரவணக்குமார், மருத்துவர் தவமணி, உஷா சுமார், பிரேம்குமார் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். புதிதாக நியமிக்கப்பட்ட உறுப்பினர் 62 வயது வரை அல்லது 6 ஆண்டுகள் பொறுப்பில் இருப்பார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow