வெள்ளபாதிப்புகளுக்கு அரசால் முடிந்ததை செய்வோம்-அமைச்சர் அன்பில் மகேஷ்

அரசாங்கத்தால் என்னென்ன உதவிகள் அவர்களுக்கு செய்து கொடுக்க முடியுமோ, அதை செய்து கொடுப்போம்

Dec 7, 2023 - 15:54
Dec 8, 2023 - 14:49
வெள்ளபாதிப்புகளுக்கு அரசால் முடிந்ததை செய்வோம்-அமைச்சர் அன்பில் மகேஷ்

அம்பத்தூர் தொழிற்பேட்டையில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளுக்கு அரசாங்கத்தால் என்ன முடியுமோ, அதை செய்து கொடுப்போம் என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

சென்னை அம்பத்தூரில் மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட அம்பத்தூர் தொழிற்பேட்டை, கொரட்டூர் ஆகிய பகுதிகளை அமைச்சர் அன்பில் மகேஷ் ஆய்வு செய்தார்.அம்பத்தூர் தொழிற்பேட்டையில் தேங்கியுள்ள மழைநீரை வேகமாக வெளியேற்ற நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.தொழிற்சாலைகளில் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள இயந்திரங்கள் மழை நீரில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது

அம்பத்தூர் உற்பத்தியாளர் சங்கத்தினருடன் மேற்கொண்ட ஆய்வுக்கு பின்பு செய்தியாளர்களை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சந்தித்தார்.அப்போது பேசிய அவர், ”வருங்காலத்தில் இதுபோன்ற பாதிப்புகள் நிகழாமல் நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும் தொழிற்பேட்டையில் நுழைந்த வெள்ளத்தால் பல லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் இயந்திரங்கள் பழுதாகி உள்ளது. உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பாதிப்படைந்ததாக  உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில் தெரிவித்துள்ளனர்.அவர்களுக்கு ரூ.2000 கோடி இழப்பு என்று அவர்கள் தெரிவித்தனர்.அரசாங்கத்தால் என்னென்ன உதவிகள் அவர்களுக்கு செய்து கொடுக்க முடியுமோ, அதை செய்து கொடுப்போம்.மேலும் வெள்ளம் சூழ்ந்த பகுதிகளை மழைநீரை வெளியேற்ற முடிந்தவரை வேகப்படுத்தி இருக்கிறோம் என்றார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow