பூந்தமல்லியில் ரூ.96 லட்சம் பறிமுதல்... பறக்கும் படை அதிரடி...
கரூரில் ஆவணங்கள் இன்றி கொண்டுவரப்பட்ட ரூ.17.30 லட்சம் ரொக்கம் கைப்பற்றப்பட்டது.
பூந்தமல்லி அருகே உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு வரப்பட்ட ரூ.96 லட்சம் ரொக்கத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
மக்களவை தேர்தலை முன்னிட்டு நாடு முழுவதும் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி அடுத்த புதுச்சத்திரம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த காரை சோதனை செய்ததில் அதில், ரூ.96 லட்சம் ரொக்கம் இருப்பது கண்டறியப்பட்டது. உரிய ஆவணங்கள் இல்லாததால் தேர்தல் பறக்கும் படையினர் பணத்தை பறிமுதல் செய்து அரசு கருவூலத்தில் ஒப்படைத்தனர்.
இதேபோல், கரூரில் மாநகராட்சிக்கு உட்பட்ட கச்சேரி பிள்ளையார் கோவில் தெரு பகுதியில் உரிய ஆவணங்கள் இன்றி காரில் கொண்டுவரப்பட்ட ரூ.17.30 லட்சம் ரொக்கம் கைப்பற்றப்பட்டது. விசாரணையில், அந்தப் பணம் மளிகை கடைக்கு சொந்தமானது எனவும் விற்பனை முடிந்து பணத்தை வீட்டிற்கு எடுத்துச் சென்றதும் தெரியவந்தது. இதையடுத்து உரிய ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்ட பிறகு பணம் திருப்பி வழங்கப்படும் என தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
What's Your Reaction?