திமுகவுக்கு இஸ்லாமியர்கள் எதிர்ப்பு... வாக்கு சேகரிக்க சென்ற இடத்தில் வாக்குவாதம்... விரக்தியில் திரும்பிய அருண் நேரு...

பெரம்பலூரில், வாக்கு சேகரிக்க செல்லும் இடமெல்லாம், தொடர்ச்சியாக பொதுமக்கள் கேள்வி எழுப்புவதால், திமுக வாரிசு வேட்பாளர் அருண்நேரு விரக்தியடைந்து பிரசாரம் செய்யாமல் திரும்பி வருவதாக கூறப்படுகிறது. அப்படி என்ன தான் கேட்கிறார்கள்.? காணலாம் இந்த செய்தி தொகுப்பில்....

Apr 3, 2024 - 12:39
திமுகவுக்கு இஸ்லாமியர்கள் எதிர்ப்பு... வாக்கு சேகரிக்க சென்ற இடத்தில் வாக்குவாதம்... விரக்தியில் திரும்பிய அருண் நேரு...

பெரம்பலூரில், வாக்கு சேகரிக்க செல்லும் இடமெல்லாம், தொடர்ச்சியாக பொதுமக்கள் கேள்வி எழுப்புவதால், திமுக வாரிசு வேட்பாளர் அருண்நேரு விரக்தியடைந்து பிரசாரம் செய்யாமல் திரும்பி வருவதாக கூறப்படுகிறது. அப்படி என்ன தான் கேட்கிறார்கள்.? காணலாம் இந்த செய்தி தொகுப்பில்....

தமிழ்நாட்டில் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் 19ஆம் தேதி நடைபெறவுள்ளது. திமுக – அதிமுக – பாஜக என மும்முனை போட்டி நிலவுவதால், தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. தேர்தல் நாள் நெருங்கி வருவதால், அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. 

இதில், பெரம்பலூர் தொகுதியில் திமுக சார்பில் அமைச்சர் கே.என்.நேருவின் மகன் அருண் நேரு களம் காண்கிறார். அவர், பெரம்பலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வேப்பந்தட்டை ஒன்றியம் வாலிகண்டபுரம், மேட்டுப்பாளையம், பசும்பலூர் உள்ளிட்ட பகுதிகளில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். 

அதன் ஒரு பகுதியாக, வி.களத்தூரில் இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளுக்கு அவர் வாக்கு சேகரிக்க சென்ற போது, அவருடன் வந்த பெரம்பலூர் திமுக எம்எல்ஏ பிரபாகரனிடம், ஓட்டு கேட்க மட்டும் எதற்காக வருகிறீர்கள் என்றும், கடந்த சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு நன்றி சொல்லவாவது எங்கள் பகுதிக்கு வந்தீர்களா எனவும் பொதுமக்கள் கேள்வி எழுப்பினர். 

மேலும், எங்களின் அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டீர்களா, தொகுதி மக்களுக்காக என்ன செய்தீர்கள் என அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பியுள்ளனர் பொதுமக்கள். இதனால், விரக்தியடைந்த அருண் நேரு, தனது பிரசாரத்தை பாதியிலேயே முடித்துக்கொண்டு திரும்பியுள்ளார். 

தொகுதியில் இவ்வளவு பிரச்னை இருக்கிறது என்பதை அறியாமலேயே தான் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளதை எண்ணி, அருண் நேரு வருத்தப்படுவதாகவும், தேர்தலில் கணிசமான வாக்குகள் கிடைக்குமா என்ற அச்சத்தில், அவருடன் உள்ள கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களிடம் அவர் புலம்பி வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மறுபுறம், பெரம்பலூர் தொகுதியில் பாஜக கூட்டணியில், தாமரை சின்னத்தில் போட்டியிடும் இந்திய ஜனநாயக கட்சியின் தலைவரும், அந்த தொகுதியின் தற்போதய எம்.பியுமான பாரிவேந்தருக்கு, மக்கள் உற்சாகமாக ஆதரவு அளித்து கொடுத்து வருகின்றனர். இந்த முறை பிரசாரத்தின்போது, 1,500 குடும்பங்களுக்கு இலவசமாக மருத்துவ சேவை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும் எனவும், அப்பகுதி மக்களின் 50 ஆண்டு கால கனவுத் திட்டமான ரயில்வே திட்டம் கொண்டு வரப்படும் என்றும் உறுதி அளித்துள்ளார். இது, பொதுமக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow