சு.வெங்கடேசனை கண்டா வர சொல்லுங்க...!! வெளுத்து வாங்கிய செல்லூர் ராஜூ...

மதுரை எம்.பி சு.வெங்கடேசன், வெற்றி பெற்ற பிறகு, வாக்களித்த மக்களுக்கு நன்றி சொல்லக் கூட தொகுதி பக்கம் வரவே இல்லை என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ குற்றம் சாட்டியுள்ளார்.

Apr 3, 2024 - 12:49
சு.வெங்கடேசனை கண்டா வர சொல்லுங்க...!! வெளுத்து வாங்கிய செல்லூர் ராஜூ...

மக்களவை தேர்தலில் மதுரை தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் டாக்டர் சரவணனை ஆதரித்து, முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், மதுரையில் இருக்கும் 2 அமைச்சர்களும் சோற்றால் அடித்த பிண்டங்கள் போல் இருக்கின்றனர் என்றும், மக்களுக்கு எதுவுமே செய்யவில்லை, அவர்களது கல்லா நிறைந்தால் போதும் என இருப்பதாகவும் குற்றம்சாட்டினார். 


மேலும், கடந்த நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று மதுரை எம்.பி ஆன சு.வெங்கடேசன், மக்களுக்கு நன்றி சொல்லக் கூட தொகுதி பக்கம் வரவில்லை, அவரை மக்கள் தற்போது கண்டா வர சொல்லுங்க என்று கூறும் அளவுக்கு தான் இருக்கிறார் என விமர்சித்தார். 

இதனைத் தொடர்ந்து பேசிய அதிமுக வேட்பாளர் டாக்டர் சரவணன், தனது மருத்துவமனையில் 300 குழந்தைகளுக்கு இலவசமாக இருதய அறுவை சிகிச்சை செய்துள்ளதாகவும், 400க்கும் மேற்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கு செயற்கை கை, கால்களை பொருத்தியுள்ளதாகவும் தெரிவித்தார். 

மேலும், சமுதாயத்திற்கு பயனுள்ள வகையில் வாழ வேண்டும் என்பதே தனது நோக்கம் என்றும், அதனால் மக்கள் தனக்கு வாக்களித்து மக்களவை உறுப்பினராக தேர்வு செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow