பட்டுக்கோட்டை: தனியார் மருத்துவமனையில் வாலிபர் மரணம் குறித்து போலீசில் புகார்

அப்துல் அஜிஸின் உறவினர்கள் மருத்துவமனை ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.  

Jan 11, 2024 - 15:11
Jan 11, 2024 - 18:49
பட்டுக்கோட்டை:  தனியார் மருத்துவமனையில் வாலிபர் மரணம் குறித்து போலீசில் புகார்

பட்டுக்கோட்டையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த வாலிபர் மரணம் அடைந்தார். தவறான சிகிச்சையின் காரணமாக இறந்துவிட்டதாக உறவினர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள ஆவணம் பகுதியைச் சேர்ந்தவர் அப்துல்லா. இவரது மகன் சதாம் என்கிற அப்துல் அஜீஸ்( 31). இவர் நேற்று திடீரென ஏற்பட்ட உடல்நிலை குறைவால் பட்டுக்கோட்டையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். 

இந்த நிலையில் சிகிச்சையின்போது நல்ல நிலையில் இருந்து அனைவருடனும் சகஜமாக பேசிக் கொண்டிருந்த அப்துல் அஜிஸ் சில மருத்துவ பரிசோதனைகளுக்கு பிறகு திடீரென இறந்து விட்டதாக கூறப்படுகிறது. 

இதுபற்றி மருத்துவமனை ஊழியர்களிடம்  நன்றாக இருந்தவர் எப்படி இருந்தார். ஏதேனும் தவறான சிகிச்சை அளிக்கப்பட்டு விட்டதா? என  உறவினர்கள் கேட்டபோது, மருத்துவமனை ஊழியர்கள் அதற்கு பதில் கூறாமலும், அப்துல் அஜீஸ் இறந்ததை பொருட்படுத்தாமலும் மருத்துவமனைக்கு கட்ட வேண்டிய மீதப் பணத்தை கேட்டு கட்டாயப்படுத்தியுள்ளனர்.இதனால் ஆத்திரமடைந்த அப்துல் அஜிஸின் உறவினர்கள் மருத்துவமனை ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.  

மேலும் அப்துல் அஜீத்தின் மரணத்தில் சந்தேகம் உள்ளதாக அப்துல் அஜிஸின் மாமா முகமது அன்சாரி பட்டுக்கோட்டை காவல் நிலையத்தில்  புகார் கொடுத்தார். அதன்பேரில் பட்டுக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து அப்துல் அஜீஸ்-ன் உடலை பிரேத பரிசோதனை செய்வதற்காக பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு எடுத்துச்சென்றனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow