கால்நடைதுறையில் காலி பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும்-அமைச்சர் தகவல்
ஒரே நேரத்தில் 1,400 டாக்டர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
கால்நடைதுறையில் காலி பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் என மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
தஞ்சை மாவட்டம், ஒரத்தநாடு கால்நடை அறிவியல் பல்கலைக்கழகம் மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் மீன்வளம், மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு கால்நடைகளுக்கு செய்யப்படும் அறுவை சிகிச்சை மற்றும் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் கூறுகையில், ”தமிழ்நாட்டில் கால்நடைதுறையின் மூலம் 7 கால்நடை மருத்துவக்கல்லூரிகள் அமைந்துள்ளது. விவசாயிகள் பயன்பெறும் வகையில் பணிகள் உள்ளது. இக்கல்லூரியின் சிறப்பம்சமாக மூலிகைகளை அறிந்து, 13 கோடி ரூபாய் அளவில் மூலிகைகளை வளர்த்து, அந்த மூலிகைகள் மூலம் மருத்துவ சிகிச்சை அளிக்கும் பணி நடைபெற்று வருகிறது.
கால்நடை மருத்துவமனைகளில் பணி நிரப்புதல் தொடர்பாக வழக்கு நடைபெற்று வருகிறது. அது முடிந்ததும் 15 நாட்களுக்குப் பிறகு காலிபணியிடங்கள் நிரப்பப்படும். ஒரே நேரத்தில் 1400 டாக்டர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும், கோமாரி நோய் தடுப்பூசி தமிழகம் முழுவதும் போடப்பட்டுள்ளது. எந்த இடத்திலும் குறைபாடு இல்லை என்று கூறினார்.இந்த ஆய்வின்போது மாவட்ட ஆட்சியர் தீபக்ஜேக்கப், கால்நடை மருத்துவக் கல்லூரி முதல்வர் நர்மதா, எம்.எல்.ஏ சந்திரசேகரன் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
What's Your Reaction?