தஞ்சையில் இளம்பெண் ஆணவக்கொலை- மேலும் 3 பேர் கைது
பெண்ணின் உறவினர்களான ரெங்கசாமி, பிரபு, சுப்பிரமணியன் ஆகிய 3 பேரை போலீசார் இன்று கைது செய்தனர்.
தஞ்சையில் மாற்று சமூக இளைஞரை காதலித்து திருமணம் செய்ததால் இளம்பெண் ஆவணக்கொலை செய்யப்பட்ட வழக்கில் மேலும் 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
தஞ்சை மாவட்டம், ஒரத்தநாடு காவல் உட்கோட்டத்திற்குட்பட்ட நெய்வவிடுதியை சேர்ந்தவர் பெருமாள் மகள் ஐஸ்வர்யா (19). பூவாளூரை சேர்ந்த பாஸ்கர் மகன் நவீன் (19). ஐஸ்வர்யா, நவீன் இருவரும் பள்ளி பருவ காலத்திலிருந்து காதலித்து வந்துள்ளனர். இருவரும் திருப்பூர் மாவட்டம் உள்ள தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வந்தனர்.இந்நிலையில் நவீன் மாற்று சமூகத்தை சேர்ந்த ஜஸ்வர்யா இருவரும் கடந்த டிசம்பர் 31ம் தேதி நண்பர்கள் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டார்.
பெண் வீட்டுக்கு திருமணம் செய்து கொண்ட தகவல் தெரியவர, ஐஸ்வர்யாவின் தந்தை பெருமாள் பல்லடம் போலீசில் புகார் செய்தார்.இதைத்தொடர்ந்து கடந்த 2ம் தேதி பல்லடம் போலீசார் ஐஸ்வர்யாவை அவரது தந்தை மட்டும் உறவினர்களுடன் அனுப்பி வைத்தனர்.கடந்த 3ம் தேதி ஐஸ்வர்யாவை அவரது தந்தை மற்றும் உறவினர்கள் துன்புறுத்தி கொலை செய்து பின்னர் உடலை எரித்துள்ளனர்.
பின்னர் கிராம நிர்வாக அலுவலர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்ததை அடுத்து காவல்துறையினர் புகார் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.11 பேரிடம் விசாரணை செய்ததில் முதல் கட்டமாக கடந்த புதன்கிழமை ஐஸ்வர்யாவின் தந்தை பெருமாள், தாய் ரோஜா கைது செய்யப்பட்டு பட்டுக்கோட்டை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவர்களை வரும் 24 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து அவர்களை சிறையில் அடைத்தனர்.
இதனைத்தொடர்ந்து மேலும் இந்த கொலை வழக்கில் நெய்விவிடுதி கிராமத்தைச் சேர்ந்த சின்ராசு (31), முருகேசன் (34), செல்வம் என்ற திருச்செல்வம் (39) ஆகிய மூன்று பேர் நேற்று கைது செய்யப்பட்டனர். அவர்களை பட்டுக்கோட்டை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நீதிபதி சத்யா முன்னிலையில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.இந்த கொலை வழக்கில் பெண்ணின் உறவினர்களான ரெங்கசாமி, பிரபு, சுப்பிரமணியன் ஆகிய 3 பேரை போலீசார் இன்று கைது செய்தனர்.
What's Your Reaction?