முதல்வர் குறித்த அவதூறு:-முன்னாள் டிஜிபிக்கு நீதிமன்றம் அறிவுறுத்தல்

திருச்சி மாவட்டத்தில் உள்ள காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளதால், இந்த கோரிக்கையை மதுரை கிளையில் தான் மனு தாக்கல் செய்ய முடியும் என அறிவுறுத்தினார்.

Dec 9, 2023 - 10:55
Dec 9, 2023 - 12:34
முதல்வர் குறித்த அவதூறு:-முன்னாள் டிஜிபிக்கு நீதிமன்றம் அறிவுறுத்தல்

தமிழக அரசு மற்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறித்து அவதூறு கருத்து பரப்பியதாக பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்யக்கோரி முன்னாள் டிஜிபி நட்ராஜ் சார்பில் வைத்த கோரிக்கையை சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்யும்படி நீதிபதி ஜெயச்சந்திரன் அறிவுறுத்தி உள்ளார்.

முன்னாள் டிஜிபியும், அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ.வுமான நட்ராஜ்,  கடந்த இரண்டு ஆண்டுகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோயில்கள் இடிக்கப்பட்டதாக தமிழக அரசு பற்றியும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பற்றியும் கருத்துகளை வாட்ஸ் ஆப்பில் பதிவு செய்ததாகக்  கூறப்படுகிறது.

இது தொடர்பாக திமுக வழக்கறிஞர் அணியைச் சேர்ந்த ஷீலா என்பவர் திருச்சி காவல் கண்காணிப்பாளரிடம் அளித்த புகாரின் பேரில்,  நட்ராஜ் மீது திருச்சி சைபர் க்ரைம் போலீசார் ஆறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்நிலையில், தனக்கு எதிராக பதியப்பட்ட வழக்கை ரத்து செய்யக்கோரி மனு தாக்கல் செய்ய இருப்பதாகவும், அதனை அவசர வழக்காக விசாரிக்க வேண்டுமென நட்ராஜ் சார்பில், நீதிபதி ஜெயச்சந்திரன் முன் முறையிடப்பட்டது.

ஆனால் நீதிபதி, திருச்சி மாவட்டத்தில் உள்ள காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளதால், இந்த கோரிக்கையை மதுரை கிளையில் தான் மனு தாக்கல் செய்ய முடியும் என அறிவுறுத்தினார்.

அதன்பின்னர் அந்த வழக்கின் எண்ணிடும் நடைமுறை முடிந்த பிறகு, எம்.பி. மற்றும் எம்.எல்.ஏ-க்கள் தொடர்பான வழக்குகளை தான் விசாரிக்கும் தன் அமர்வில், விசாரணைக்கு பட்டியலிடப்படும் என தெரிவித்தார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow