ஆணவப்படுகொலைகளை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி டிஐஜியிடம்  மனு 

ஆணவப்படுகொலையை தடுத்து நிறுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்

ஆணவப்படுகொலைகளை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி டிஐஜியிடம்  மனு 

தமிழகத்தில் அதிகரித்து வரும் ஆணவப்படுகொலைகளை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தஞ்சையில் டிஐஜியிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டத்தில் ஆல் இந்தியா தலித் ஆக்சன் கமிட்டி தேசிய பொதுச்செயலாளர் ராஜா, தஞ்சை சரக டிஐஜி ஜியாவுல்ஹக்கிடம் மனு அளித்தார். அதில் ஆணவப்படுகொலையை மகிளா நீதிமன்ற மூலம் விரிவாக விசாரணை செய்து தொடர்புடைய அனைத்து குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுத்து நீதிமன்றத்தின் மூலம் தண்டனை பெற்றுத் தர வேண்டும்.

தஞ்சாவூர் ஆணவக்கொலை வழக்கில் கடமையை செய்யத்தவறிய பல்லடம் காவல் நிலைய அலுவலர்கள் மீது துறை ரீதியான விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.

தஞ்சை மாவட்டத்தில் அதிகரித்து வரும் ஆணவப்படுகொலையை தடுத்து நிறுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow