அமைச்சர்கள் களத்தில் இருந்திருந்தால் மக்களின் கோபம் குறைந்திருக்கும்- அண்ணாமலை
சினிமா நடிகர்களின் ரசிகர்கள் உதவி செய்வது வரவேற்கத்தக்கது.
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் அமைச்சர்கள் களத்தில் இருந்திருந்தால் மக்களின் கோபம் குறைந்திருக்கும் என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
மிக்ஜாம் புயலால் கடுமையாக பாதிக்கப்பட்ட அம்பத்தூர் தொழிற்பேட்டையில் ஆய்வு மேற்கொண்ட பாஜக தலைவர் அண்ணாமலை நீரால் சூழ்ந்து உள்ள தொழிற்சாலைகளை ஆய்வு செய்தார்.தொடர்ந்து உற்பத்தியாளர்களிடம் பாதிப்பு குறித்து கேட்டறிந்தார்.பின்னர் அண்ணாமலை செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், அம்பத்தூர் தொழிற்சாலை சுமார் 1400 ஏக்கர் பரப்பளவு கொண்ட எம்எஸ்எம்இ நிறைய தொழில் நிறுவனங்கள் இங்கு இருக்கின்றன. இந்த நிறுவனங்கள் சுமார் 13,000 கோடி வருவாய் ஈட்டி தரக்கூடியவர்கள் இங்கு உள்ள மெஷின்கள் எல்லாம் நீரால் சூழ்ந்து பழுதடைந்து உள்ளது.இதனால் கோடிக்கணக்கில் இவர்களுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
இதுபோன்று ஆயிரம் நிறுவனங்கள் அனைத்துமே ஸ்தம்பித்து போய் நிற்கின்றது.இதனால் இவர்கள் உற்பத்தி பண்ண முடியாத சூழல் மேலும் இரண்டு மாதங்கள் ஆகும். இங்கு உள்ள மெஷின்கள் லோன் அடிப்படையில் வாங்கியுள்ளனர். தற்போது அவற்றிற்கு லோன் கட்ட முடியாத சூழ்நிலையும் ஏற்பட்டுள்ளது.இரண்டாவதாக இன்சூரன்ஸ் நிறுவனங்களுக்கு தகவல் அளிக்கப்பட்டு இவர்களுக்கு தேவையான உதவிகளை செய்திட வலியுறுத்துகிறோம். மேலும் மத்திய அமைச்சரிடம் நாளை சந்தித்து இது குறித்து தகவல் அளித்து நடவடிக்கை எடுக்கப்படும்.
போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்து இருந்தால் அமைச்சர்கள் களத்தில் இருந்திருப்பார்கள்.பொறுப்பு அமைச்சர்கள் களத்தில் இல்லை.இருந்திருந்தால் மக்களின் கோபம் குறைந்து இருக்கும்.அரசியல் ரீதியாக இன்னும் சிறப்பாக செயல்பட்டு இருக்கலாம்.திமுக நிர்வாகிகள் கூட களத்தில் இல்லை.கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் என்பது போன்று உள்ளது. மக்களுக்கு 234 எம்.எல்.ஏ, மந்திரிகள் ஆகியோரின் சம்பளம் தேவை இல்லை. இவர்களின் சம்பளம் நிவாரண தொகை என்பது ஒரு துளிதான். எம்.பி,எம்.எல்.ஏக்கள், மந்திரிகளின் சம்பளத்தை கொடுப்பதை விட களத்திற்கு வந்தால் பிரச்சனை தீரும்.மழை வெள்ளம் குறித்து ஊடகத்தில் சட்டமன்ற உறுப்பினர்கள் பேசுவது மக்களுக்கு கோபத்தை ஏற்படுத்துகிறது.
பாஜக களத்தில் உள்ளது. மத்திய அரசுக்கும், துறை சார்ந்த அமைச்சர்களும் பாதிக்கப்பட்ட உற்பத்தியாளர்களின் நிலை குறித்து தெரிவித்து தேவையான உதவிகளை செய்வதற்கு, நிவாரணம் உதவி செய்வதில் பாஜக தெளிவாக உள்ளது.மத்திய அமைச்சரை சந்திக்க உற்பத்தியாளர்கள் வர உள்ளனர்.அவர்கள் கோரிக்கைகளை நேரடியாக அமைச்சரிடம் தெரிவிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாநில அமைச்சருக்கு இந்த பாதிப்புகள் குறித்து எடுத்துரைக்க இங்குவந்துள்ளேன்.
கமல் களத்தில் இல்லை. கூலி வேலை செய்பவர்கள் கூட களத்தில் உள்ளனர். சொல்வது எளிது செய்வது கடினம்.அண்ணன் கமல் குறித்து கருத்து கூற விரும்பவில்லை.சேவை செய்பவர்கள் களத்தில் உள்ளனர்.இளைஞர்கள், மென் பொறியாளர்கள் என முகம் தெரியாத பலர்உதவி செய்கின்றனர். சினிமா நடிகர்களின் ரசிகர்கள் உதவி செய்வது வரவேற்கத்தக்கது.
சென்னை வாசிகள் சென்னையை கைவிடவில்லை. சென்னை வாசிகள் பிற மாநிலங்களிலிருந்து வந்து கூட உதவி வருகின்றனர்.தமிழ்நாடு பேரிடர் மழை வெள்ள பாதிப்புகள் குறித்து தினந்தோறும் தேசிய தலைமைக்கு மாநில தலைமை சார்பில் அறிக்கை அனுப்பப்பட்டு வருகிறது.இதனைத் தொடர்ந்து அம்பத்தூர் தொழிற்சாலைகள் சங்க அய்மா அலுவலகத்தில் சென்று அங்குள்ள நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி, என்னென்ன நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்பதை கலந்தாய்வு செய்து பின் அவர்களுக்கு வாக்குறுதி அளித்து அங்கிருந்து அண்ணாமலை சென்றார்.
What's Your Reaction?