70,000 டப்பா பஞ்சாமிர்தங்கள் அழிப்பா..? உண்மை சொலுங்கள் கொந்தளிக்கும் மக்கள்..

தேவஸ்தானத்திற்கு சொந்தமான பழனி அருகே உள்ள கள்ளிமந்தயம் கோசாலையில் குழி தோண்டி 70,000 மேற்பட்ட பஞ்சாமிர்த அழிக்கப்பட்டதாக தகவல்

Feb 17, 2024 - 12:20
Feb 17, 2024 - 13:03
70,000 டப்பா பஞ்சாமிர்தங்கள் அழிப்பா..? உண்மை சொலுங்கள் கொந்தளிக்கும் மக்கள்..

பழநி முருகன் கோவிலில் 70,000 டப்பா பஞ்சாமிர்தங்கள் பள்ளத்தில் கொட்டி அழிக்கப்பட்டதாக வெளியான தகவல் குறித்து தேவஸ்தான நிர்வாகம் விளக்கம் அளிக்கப் பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டம், பழநி முருகன் கோவிலில் கடந்த சில நாட்களாகப் பிரசாதங்கள் மற்றும் பஞ்சாமிர்தம் எனக் காலாவதியான பொருட்களை விற்பனை செய்வதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. 

இந்த நிலையில் திண்டுக்கல் மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி கலைவாணி தலைமையிலான பாதுகாப்புக் குழுவினர் அனைத்து கடைகள் மற்றும் தேவஸ்தான பிரசாதங்கள் தயாரிக்கும் இடங்களில் ஆய்வு செய்தனர். பின்னர் ஆய்வு செய்த பிரசாதங்களை ஆய்வகத்திற்கும் அனுப்பி வைத்தனர்.

இந்த நிலையில் தேவஸ்தான நிர்வாகமானது தைப்பூசத்திற்குப் பக்தர்கள் கூட்டம் அதிக அளவில் வரக்கூடும். ஆகையால் அதிகளவில் பஞ்சாமிர்த தயாரிப்பு செய்து வைத்துள்ளதாகவும், பக்தர்கள் வருகையால் பஞ்சாமிர்த விற்பனை அதிகளவில் ஆகாததால் பஞ்சாமிர்தம் தேக்கம் அடைந்து விட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இதனால் விற்பனை செய்யப்பட்ட சில பிரசாதங்களில் தவறு ஏற்பட்டுள்ளதாகவும், அதனால் அதனைத் தேவஸ்தானத்திற்கு சொந்தமான பழநி அருகே உள்ள கள்ளிமந்தயம் கோசாலையில் குழி தோண்டி 70,000 பஞ்சாமிர்த டப்பாக்கள் அழிக்கப்பட்டதாகத் தகவல் பரவி வருகிறது. 

இந்த விவகாரத்தில் உண்மை நிலை குறித்து தேவஸ்தான நிர்வாகம் விளக்கம் அளிக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow