தூத்துக்குடி மழை வெள்ள பாதிப்பு குறித்து மத்திய குழு ஆய்வு
மருத்துவமனையில் மழை வெள்ள பாதிப்பு காரணமாக கட்டிடம் ஏதும் சேதம் ஆகி உள்ளதா? நோயாளிகள் பாதிக்கப்பட்டனரா? எனவும் கேட்டறிந்தனர்.
தூத்துக்குடி மழை வெள்ள பாதிப்பு குறித்து தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ஏற்பட்ட பாதிப்பு குறித்து ஆய்வு செய்வதற்காக மத்திய குழுவினர் வருகை தந்தனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 17,18 தேதிகளில் பெய்த கனமழையால் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மற்றும் மாநகரப் பகுதிகளில் மழை நீர் வெள்ளம் போல் சூழ்ந்து பொதுமக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்ததுடன் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.இந்த மழை வெள்ள பாதிப்பு குறித்து கடந்த 20ம் தேதி மத்திய குழுவினர் ஆய்வு செய்தனர். இதைத் தொடர்ந்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆய்வு செய்தார்.
இதைத் தொடர்ந்து இன்று இரண்டாவது கட்டமாக 7 பேர் கொண்ட மத்திய அரசின் பேரிடர் மேலாண்மை துறை தலைவர் கே.பி.சிங் தலைமையிலான குழுவினர் தூத்துக்குடி மாவட்டத்தில் மழை வெள்ள பாதிப்பு குறித்து ஆய்வு செய்தனர்.இதில் ஒரு குழுவினரான மத்திய குழுவை சேர்ந்த விஜயகுமார், ரங்கநாத் ,பாலாஜி உள்ளிட்ட மத்திய அரசு அதிகாரிகள் மற்றும் தமிழக அரசின் சிப்காட் மேலாண்மை இயக்குனர் டாக்டர் செந்தில்ராஜ் ஆகியோர் தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மழை வெள்ளத்தால் சேதமடைந்த பல கோடி ரூபாய் மதிப்புள்ள கருவி வைக்கப்பட்டுள்ள அறைக்கு நேரடியாக சென்று அந்த கருவியின் பாதிப்பு குறித்தும், மேலும் சேதமடைந்த கருவியின் மதிப்பு எவ்வளவு என மருத்துவ கல்லூரி முதல்வரிடம் கேட்டறிந்தனர்.
மேலும் மருத்துவமனையில் மழை வெள்ள பாதிப்பு காரணமாக கட்டிடம் ஏதும் சேதம் ஆகி உள்ளதா? நோயாளிகள் பாதிக்கப்பட்டனரா? எனவும் கேட்டறிந்தனர்.
What's Your Reaction?