பங்குனி அமாவாசையொட்டி சதுரகிரியில் 2 மாதங்களுக்கு பிறகு பக்தர்களுக்கு அனுமதி…
Chaturagiri Panguni Amavas
சதுரகிரி கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு 2 மாதத்திற்கு பிறகு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் சுமார் 4,500 அடி உயரத்தில் பிரதித்தி பெற்ற சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில் அமைந்துள்ளது. இங்கு அமாவாசை மற்றும் பௌர்ணமி, பிரதோஷம் போன்ற நாட்களில் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படும். இந்நிலையில் கடந்த 2 மாதமாக கனமழையின் காரணமாக இங்கு இருக்க ஓடைகள் நிரம்பி வழிந்ததால், இந்த கோவிலுக்கு செல்ல 2 மாதத்திற்கு வனத்துறை சார்பில் பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டது.
தற்போது பங்குனி அமாவாசையொட்டி இந்த தடை நீக்கப்பட்டுள்ளது. வருகின்ற சனிக்கிழமை (ஏப்ரல் 6) முதல் தொடர்ந்து 4 நாட்கள் வழிபட அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. மேலும், அனுமதிக்கப்பட்ட நாட்களில் மழை பெய்தால் இந்த முறையும் அனுமதி ரத்து செய்யப்படும் என வனத்துறை தகவல் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
எனவே அனுமதிக்கப்பட்ட நாளில் காலை 6 மணிமுதல் நண்பகல் 12 மணி வரை மட்டுமே பக்தர்கள் மலை ஏற அனுமதிக்கப்படுவார்கள். மேலும் வெயில் காலம் என்பதால் எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களை எடுத்துசெல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
What's Your Reaction?