நான் ஊழலை ஒழிக்க போராடுகிறேன், எதிர்கட்சிகள் ஊழல்வாதிகளை காப்பாற்ற போராடுகிறார்கள் - பிரதமர்

ஊழலை ஒழிக்க வேண்டும் என்று நான் போராடி கொண்டிருக்கும்போது, ஊழல்வாதிகளை காப்பாற்ற எதிர்க்கட்சிகள் போராடுவதாக பிரதமர் நரேந்திர மோடி கடுமையாக விமர்சித்துள்ளார். 

Apr 5, 2024 - 09:27
நான் ஊழலை ஒழிக்க போராடுகிறேன், எதிர்கட்சிகள் ஊழல்வாதிகளை காப்பாற்ற போராடுகிறார்கள் - பிரதமர்

மேற்கு வங்க மாநிலம் கூச் பெஹாரில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய பிரதமர் நரேந்திர மோடி, ஊழல்வாதிகள் தண்டிக்கப்படுவதையும், ஏழைகளுக்கு நீதி கிடைப்பதையும் உறுதி செய்வேன் என்றார்.

"ஊழலை ஒழிக்க வேண்டும் என நான் சொல்கிறேன். காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் போன்ற எதிர்க்கட்சிகள் ஊழல்வாதிகளை காப்பாற்றுங்கள் என்கிறார்கள். அடுத்த ஐந்தாண்டுகள் ஊழல்வாதிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். கடந்த 10 ஆண்டு பாஜக ஆட்சியில் நீங்கள் பார்த்த வளர்ச்சி வெறும் டிரைலர் தான். இன்னும் நாட்டுக்காக நான் செய்ய வேண்டிய விஷயங்கள் நிறைய உள்ளன. மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ், இடதுசாரிகள், காங்கிரஸ் கட்சிகள் ஒன்றுக்கொன்று சண்டையிடுவது போல் இருக்கலாம், ஆனால் திரைக்கு பின்னால் அவர்கள் அனைவரும் டெல்லி பங்குதாரர்கள். 

ரேசன் மற்றும் ஆசிரியர் நியமன ஊழல்களில் திரிணாமுல் காங்கிரஸ் தலைவர்களின் வீடுகளில் இருந்து கட்டுகட்டாக நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. மாநிலத்தையே உலுக்கிய மேற்கு வங்கத்தில் பெண்கள் சந்திக்கும் கொடுமைகளுக்கு பாஜகவால் மட்டுமே முடிவு கட்ட முடியும். சந்தேஷ்காலி குற்றவாளிகளுக்கு தண்டனை உறுதி என்று பாஜக உறுதியளித்துள்ளது. குற்றவாளிகள் தங்களின் எஞ்சிய வாழ்நாளை சிறையில் தான் கழிப்பார்கள். அவர்களை காப்பாற்ற திரிணாமுல் காங்கிரஸ் எடுத்த முயற்சிகளை நாட்டு மக்கள் பார்த்து கொண்டிருக்கிறார்கள்."

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow