கோயிலில் ரீல்ஸ் எடுத்து கும்மாளம்… தர்மகர்த்தாவால் தர்ம சங்கடம்
திருவேற்காடு கருமாரியம்மன் கோயில் தர்மகர்த்தா, அறநிலையத்துறை ஊழியர்களோட சேர்ந்து கோயிலுக்குள்ளயே ரீல்ஸ் எடுத்த வெளியிட்டது சர்ச்சைய கெளப்பியிருக்கு...
சென்னையில புகழ்பெற்ற ஆன்மிக தலமா திருவேற்காடு கருமாரியம்மன் கோயில் இருக்கு. இந்த கோயிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செஞ்சுட்டு போறாங்க.
இந்த நிலையில, கோயில் அறக்கட்டளை தர்மகர்த்தாவான வளர்மதி, அறநிலையத்துறை ஊழியர்கள் 12 பேரோட சேர்ந்து, கோயிலுக்குள்ளயே ரீல்ஸ் எடுத்து வெளியிட்டிருக்காங்க. அரசு படத்துல கோயில்ல மணி அடிக்கிற வேலைய வடிவேலு ராஜினாமா செய்ற காமெடி சீன, ஐடி கார்ட வச்சு அப்டியே ரீகிரியேட் பண்ணி இருக்காங்க. நான் அடிச்ச மணி ஆண்டவனுக்கு கேட்டுச்சோ இல்லையோ, அரசாங்கத்துக்கு கேட்டுச்சுனு வடிவேலு சொல்ற மாதிரி, தர்மகர்த்தா போட்ட ரீல்ஸ், இப்ப சோசியல் மீடியா ஃபுல்லா கேட்டுக்கிட்டே இருக்கு.
அதுமட்டும் இல்லாம, அழகான சின்ன தேவதை பாட்டுக்கு, அவங்க 13 பேரும் செஞ்ச ரீல்ஸ், சமுத்திரம் படத்துல வர்ர அண்ணன் தங்கை பாசத்தையே தூக்கி சாப்ட்ருச்சு...
சமீபத்துல சென்னை கபாலீஸ்வரர் கோயிலுக்குள்ள டான்ஸ் ஆடி வீடியோ வெளியிட்ட ரெண்டு இளைஞர்கள புடிச்சு வெளுத்துவிட்டாங்க. ஆனா, திருவேற்காடு கோயில்ல தர்மகர்த்தாவே ரீல்ஸ் எடுத்தது தர்ம சங்கடத்த ஏற்படுத்தி இருக்கு.
கோயிலுக்குள்ள செல்போன்லயே போட்டோ எடுக்க கூடாதுனு கட்டுப்பாடு இருக்கும்போது, தர்மகர்த்தாவும் அறநிலையத்துறை ஊழியர்களும் எப்டி ரீல்ஸ் எடுக்கலாம்னு நெட்டிசன்கள் வறுத்தெடுத்துக்கிட்டு வர்ராங்க. நிம்மதி தேடி வர்ர பக்தர்கள் இதையெல்லாம் பாத்துட்டு மன உளைச்சலுக்கு ஆளாவாங்கன்னும், அவங்க 13 பேர் மீது நடவடிக்கை எடுக்கணும்னும் வலியுறுத்திட்டு இருக்காங்க....
இந்த நிலையில, அறநிலையத்துறை நடவடிக்கை எடுக்குமா..? இல்ல, ரீல்ஸ்ச ரசிச்சுட்டு விட்டுடுமான்னு பொறுத்திருந்துதான் பார்க்கணும்.
What's Your Reaction?