புதுச்சேரி மக்களவைத் தேர்தலில் 78.80% வாக்குகள் பதிவு... அதிக வாக்குப்பதிவு எங்கு தெரியுமா?
புதுச்சேரியில் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் 78.80% வாக்குகள் பதிவாகியுள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
புதுச்சேரியில் உள்ள ஒரு மக்களவைத் தொகுதி தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெற்றது. இதில், வாக்காளர்கள் ஆர்வத்துடன் வந்து காத்திருந்து வாக்குகளை செலுத்தினர். வாக்குப்பதிவு நிறைவடைந்த நிலையில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் கட்டுப்பாட்டு இயந்திரங்கள் சீல் வைக்கப்பட்டு, பலத்த போலீஸ் பாதுகாப்புடன் லாஸ்பேட்டையில் உள்ள மகளிர் பொறியியல் கல்லூரி மற்றும் மோதிலால் நேரு பாலிடெக்னிக் கல்லூரில் அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறையில் வைக்கப்பட்டுள்ளது. மேலும், சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டு மூன்றடுக்கு போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் புதுச்சேரியில் மொத்தமுள்ள வாக்காளர்களில் 78.80% பேர் வாக்கு செலுத்தி தங்கள் ஜனநாயக கடமையை நிறைவேற்றியுள்ளது தெரியவந்துள்ளது. இதில், அதிகபட்சமாக பாகூர் சட்டமன்ற தொகுதியில் 88.76% வாக்குகளும் குறைந்தபட்சமாக மாஹே சட்டமன்ற தொகுதியில் 65.11% வாக்குகளும் பதிவாகியுள்ளன.
What's Your Reaction?