10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் ரிலீஸ்..91.55% பேர் தேர்ச்சி.. மாணவிகளே டாப்!
தமிழ்நாட்டில் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வின் முடிவுகள் இன்று காலை வெளியானது. 91.55% மாணவ மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். வழக்கம் போல இந்த ஆண்டும் மாணவ மாணவிகளே தேர்ச்சி பெற்றுள்ளனர்.
தமிழ்நாட்டின் பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தின் படி 10, 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆண்டுதோறும் பொதுத்தேர்வு நடத்தப்படுகிறது. அதன்படி, இந்தாண்டுக்கான 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு, தமிழ்நாடு முழுவதும் 4,107 மையங்களில் கடந்த மார்ச் 26-ம் முதல் ஏப்ரல் 8-ம் தேதி வரை நடந்தது. இந்தத் தேர்வை 9,10,175 பள்ளி மாணவர்களும், 16,488 தனித்தேர்வர்களும் எழுதினர். அதில், 9,08,000 மாணவர்கள் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வை தொடர்ந்து, விடைத்தாள்களை திருத்தும் பணி, மாநிலம் முழுவதும் 88 முகாம்களில் ஏப்ரல் 12-ம் தேதி முதல் 22-ம் தேதி வரை நடைபெற்றது. இந்நிலையில், 10-ம் வகுப்புப் பொதுத்தேர்வின் முடிவுகள் இன்று (மே 10) வெளியாகவுள்ளது. காலை 9.30 மணி அளவில் தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், முடிவுகளை www.tnresults.nic.in மற்றும் www.dge.tn.gov.in மற்றும் results.digilocker.gov.in ஆகிய இணையதளங்களில் மாணவர்கள் அறிந்து கொள்ளலாம் என்றும், மாணவர்கள் பதிந்துள்ள தொலைபேசி எண்ணுக்கு குறுஞ்செய்தி அனுப்பப்படும் என்றும் பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.
இணையதளம் மட்டுமின்றி, பள்ளிகள் மூலமாகவும், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள தேசிய தகவலியல் மையங்கள், அனைத்து மைய, கிளை நூலகங்கள் மூலமாகவும் கட்டணமின்றி தேர்வு முடிவுகளை மாணவர்கள் அறிந்து கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.
பள்ளிமாணவர்கள் தாங்கள் படித்த பள்ளிகள் மூலமாகவும் தேர்வு முடிவுகளை அறியலாம். மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இயங்கும் தேசிய தகவலியல் மையங்கள் (என்ஐசி) மற்றும் அனைத்து மைய, கிளை நூலகங்களிலும் கட்டணமின்றி தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.
மாணவர்களின் மதிப்பெண் பட்டியல்களை ww.dge.tn.gov.in வலைதளத்திலிருந்து பள்ளி தலைமை ஆசிரியர்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்றும், அதற்கான முன்னேற்பாடுகளை தயாராக வைத்துக் கொள்ள வேண்டும் என்று தேர்வுத் துறை அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.
What's Your Reaction?