வைக்கோலில் மறைத்து கடத்தப்பட்ட 3 டன் வெடி பொருள்

விசாரணையை முழுமையாக  செய்தால் மட்டுமே  முழு உண்மைகளும் வெளிவர வாய்ப்புண்டு.

Dec 1, 2023 - 11:40
Dec 1, 2023 - 12:18
வைக்கோலில் மறைத்து  கடத்தப்பட்ட 3 டன் வெடி பொருள்

தருமபுரியிருந்து கோயமுத்தூருக்கு மூன்று டன் வெடிபொருட்கள் கடத்தபடுவதாக 29ம் தேதி இரவு சேலம் போலீஸ் கட்டுபாட்டு அறைக்கு ஒரு ரக்சிய தகவல் வந்திருக்கிறது. எந்த வண்டி? வெடிபொருள் என்ன? என்ற விவரத்தை கேட்பதற்குள் பேசிய நபர் கட் செய்து விட்டார். முதலில் பேசும்போது, வைக்கோல் பில்லில் மறைத்து வைத்து வெடிபொருட்கள் போகிறது என்ற தகவலை தெரிவித்து இருந்தார் குறிப்பிட்டு பேசிய நபர்.

உடனே  அவசரமாக வாகனங்களை சோதனை செய்யும் பணிகளை தொடங்கியது காவல்துறை. கருப்பூர் எஸ்.எஸ்.ஐ குணசீலன் தலைமையிலான காவல்துறையினர் ஒமலூர் டோல்கேட்டில் நின்று ஒவ்வொரு வண்டியாக சோதனை செய்தனர். அதிலும் வைக்கோல் ஏற்றி வந்த லாரியை தரவாக சோதனை செய்தனர். விடியற்காலை நேரத்தில் ஈச்சர் மாதிரியான வந்த வண்டியில் வைக்கோல் போர் போல செட் செய்து வந்திருக்கிறது. அதை தரவாக சோதனை செய்ததில் வைக்கோல் பில்லில் மறைத்து வைத்திருந்த , 100 பெட்டிகளில் ஜெலட்டின் ஜெல், 2,580 கிலோ, ஒரு பெட்டியில், 950 எலக்ட்ரிக் டெட்டனேட்டர், 3 மீட்டர் ஒயர் என, 2,953 கிலோ வெடிபொருட்கள் இருந்தன. 

மூன்று டன்னிற்கு 47 கிலோ வெடிப்பொருட்களே குறைவாக இருந்திருக்கிறது. லாரியை ஒட்டிவந்த தர்மபுரியை சேர்ந்த டிரைவர் இளையராஜாவை  கைது செய்தனர்.விசாரணை நடத்திய நுண்ணறிவு பிரிவு போலீஸாரிடம் பேசினோம். ' டிரைவரை கைது செய்து விசாரித்ததில் வைக்கோல் பில்லை லோடாக ஏத்திவிட்டு கோவை போய் கூப்பிடு நம்பர் தருகிறோம் என்று சொல்லி தருமபுரியிலிருந்து அனுப்பியதாக சொன்னார். கோவைக்கு குவாரிக்கு அனுப்பிய வெடி பொருளா? என்று சோதனை செய்து இருக்கிறோம். நாசவேலைக்கு அனுப்பிய வெடி பொருளா என்பதையும் விசாரித்தோம். பில் இல்லமால் வெடிபொருளை கொண்டு போக திட்டமிட்டு இருப்பதாக விசாரணை முதல் கட்டத்தில்  தெரியவந்துள்ளது. 

கேரளாவுக்கு கொண்டு போன மாதிரி சந்தேகம் வருகிறது. விசாரணையை முழுமையாக  செய்தால் மட்டுமே  முழு உண்மைகளும் வெளிவர வாய்ப்புண்டு. விசாரணை போய் கொண்டு இருக்கிறது. வெடிபொருள் சம்மந்தமான விசயம் என்பதால் லாரியை போலீஸ் டிரெய்னிங் எடுக்கும் பயிற்சி இடத்துக்கு கொண்டு சென்று விட்டோம். அதம்பாவிதம் எதுவும் நடந்துவிட கூடாது என்பதில் கவனமாக இருக்கிறோம்'என்றார்கள்.

-பழனிவேல்

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow