பல்கலைக்கழகத்தில் யாகம் வளர்த்ததால் சர்ச்சை 

பல்கலைக்கழகங்களில் அரசின் செலவில் நடைபெறும் மாணவர்களுக்கான இதுபோன்ற கொண்டாட்ட நிகழ்வுகளில் மதத்தை புகுத்தியது முற்றிலும் தவறு என கண்டனங்கள் எழுந்துள்ளது.

பல்கலைக்கழகத்தில் யாகம் வளர்த்ததால் சர்ச்சை 

திருவாரூரில் உள்ள தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் ஜெய் ஸ்ரீ ராம் என வாசகங்கள் எழுதப்பட்டு தீபாவளி கொண்டாடப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாட்டிலேயே ஒரேயொரு மத்திய பல்கலைக்கழகமாக உள்ள தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தை திருவாரூர் அருகே நீலக்குடி பகுதியில் முன்னாள் முதல்வரும், மறைந்த திமுக தலைவருமான கலைஞர் கருணாநிதி பெரும் முயற்சி எடுத்து கொண்டு வந்தார்.

இந்த தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் கடந்த 17ஆம் தேதி தீபாவளி கொண்டாட்டங்கள் நடைபெற்றுள்ளன.இந்த கொண்டாட்டத்தின்போது, ‘ஜெய் ஸ்ரீ ராம்’ என ஆங்காங்கே வாசகங்கள் எழுதப்பட்டிருந்ததும், மேடைகளில் ‘ஜெய் ஸ்ரீ ராம்’ என வாசகம் எழுதப்பட்டிருந்ததும், கோலத்தில் ‘ஜெய் ஸ்ரீ ராம்’ என போடப்பட்டுள்ளது. மேலும் புரோகிதர்களை அழைத்து வந்து மந்திரங்கள் சொல்லி பூஜை செய்து தீபாவளி கொண்டாட்டத்திலும் ஈடுபட்டுள்ளனர்.அதில் கல்லூரி துணை வேந்தர் கலந்து கொண்டதும் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற தீபாவளி கொண்டாட்ட புகைப்படங்கள் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவி  சர்ச்சை ஏற்பட்டுள்ளது. பல்கலைக்கழகங்களில் அரசின் செலவில் நடைபெறும் மாணவர்களுக்கான இதுபோன்ற கொண்டாட்ட நிகழ்வுகளில் மதத்தை புகுத்தியது முற்றிலும் தவறு எனவும் இதற்காக வன்மையாக கண்டிக்கிறோம் எனவும் இந்திய மாணவர் சங்கம் தனது கண்டனங்களை தெரிவித்துள்ளது.இதேப்போன்று பல்வேறு அமைப்புகள், இயக்கங்கள் கண்டனம் தெரிவித்துள்ளன.இச்சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொள்ள வேண்டும் எனவும் கோரிக்கை எழுந்துள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow