மக்களை நம்ப வைத்து ஏமாற்றும் செயலில் அரசு ஈடுபட்டுள்ளதாக நயினார் நாகேந்திரன் கண்டனம்

அதிகாரிகள் வெள்ள பாதிப்பை முறையாக கணக்கிட்டார்களா? இல்லையா? என்பதை தாண்டி பாதிக்கப்பட்ட அனைவருக்கும் 6000 வழங்க வேண்டும்.

Jan 4, 2024 - 15:22
Jan 4, 2024 - 22:14
மக்களை நம்ப வைத்து ஏமாற்றும் செயலில் அரசு ஈடுபட்டுள்ளதாக நயினார் நாகேந்திரன் கண்டனம்

திருநெல்வேலி மாவட்டத்தில் அனைவருக்கும் நிவாரணத் தொகை அறிவித்துவிட்டு, ஒரு சில பகுதிக்கு மட்டும் வழங்குவது மக்களை நம்ப வைத்து ஏமாற்றும் செயல் என நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ குற்றம்சாட்டியுள்ளார்.

திருநெல்வேலி மாவட்டத்துக்கு உட்பட்ட மானூர் தாலுகாவில் பல கிராமங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளது. அந்த பகுதியைச் சேர்ந்த பொதுமக்களுக்கு ஆயிரம் ரூபாய் மட்டுமே நிவாரணத்தொகை வழங்கப்படுகிறது. அதனை வாங்க மறுத்து 6000 வேண்டும் என 20வதுக்கும் மேற்பட்ட பெண்கள் மாவட்ட ஆட்சியரை சந்தித்து  மனு அளிக்க  வந்திருந்தார்கள்.

அவருடன் சேர்ந்து திருநெல்வேலி சட்டமன்ற உறுப்பினரும், பாரதிய ஜனதா கட்சியின் சட்டமன்ற குழு தலைவருமான நயினார் நாகேந்திரன் மனு அளித்தார்.அதனைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த பேசிய எம்.எல்.ஏ நைனா நாகேந்திரன், ”திருநெல்வேலி மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அனைத்து பகுதிகளுக்கும் நிவாரணம் முறையாக வழங்கப்படவில்லை. மானூர் தாலுகா பகுதியில் உள்ள கிராமங்களில் பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில் அங்கு ஆயிரம் ரூபாய் மட்டுமே வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மழை வெள்ள நிவாரணம் 6000 ரூபாய் வழங்க வேண்டும். நேற்று முதலமைச்சரை சந்தித்தபோது வாய்மொழியாக 6000 வழங்க வேண்டும் என கூறினேன். எழுத்துப்பூர்வமாக முதல்வரிடம் கோரிக்கை மனு அளிக்க உள்ளேன். அதிகாரிகள் வெள்ள பாதிப்பை முறையாக கணக்கிட்டார்களா? இல்லையா? என்பதை தாண்டி பாதிக்கப்பட்ட அனைவருக்கும் 6000 வழங்க வேண்டும். மாவட்ட ஆட்சியரை சந்தித்து பாதிக்கப்பட்ட அனைத்து பகுதிகளுக்கும் 6000 வழங்க ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார். மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மானூர் மக்கள் திமுக அரசு புறக்கணித்துள்ளது. மானூர் மக்களை நம்ப வைத்து ஏமாற்றம் செயல். நெல்லை மாநகராட்சி பகுதியில் 24 மணி நேரத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவு வந்துள்ள நிலையில் அது குறித்த கேள்விக்கு, பாரபட்சமின்றி ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். இது குறித்து சட்டமன்ற கூட்டத்தொடரில் நான் பேச இருக்கிறேன்” என்றார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow