நீ அதிமுக..! அடிக்க பாய்ந்த திமுக எம்எல்ஏ...  பூமி பூஜையின் போது குளறுபடி...! 

பெரம்பலூர் திமுக எம்.எல்.ஏ பிரபாகரன் அடிக்க பாய்ந்த சம்பவத்தால் பரபரப்பு

Mar 11, 2024 - 11:25
நீ அதிமுக..! அடிக்க பாய்ந்த திமுக எம்எல்ஏ...   பூமி பூஜையின் போது குளறுபடி...! 


பெரம்பலூரில் குடிநீர் தொட்டி அமைக்கும் பணிக்காக நடந்த பூமி பூஜையின் போது, ஊராட்சி துணை தலைவர் குறுக்கிட்டு அடுக்கடுக்கான கேள்விகளை கேட்டதால் கடுப்பான திமுக எம்.எல்.ஏ அடிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை வட்டம் பெரியவடகரை கிராமத்தில் 8 வது வார்டு பகுதியில் குடிநீர் தொட்டி அமைக்க  பூமி பூஜை விழா நடைபெற்றது. இந்த வார்டின் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் முருகானந்தம் என்பவருக்கு இதுதொடர்பாக தகவல் தெரிவிக்கப்படவில்லை எனக்கூறப்படுகிறது. இந்நிலையில் பெரம்பலூர் திமுக எம்.எல்.ஏ பிரபாகரன், மற்றும் ஊராட்சி பிரதிநிதிகள் சார்பாக பூமி பூஜை விழா நடந்து கொண்டிருந்தது. அப்போது, அங்கு வந்த முருகானந்தம் தனக்கு இதுதொடர்பாக எந்த தகவலும் அளிக்கப்படவில்லை என்றும், மற்ற உறுப்பினர்களிடம் கலந்து ஆலோசிக்காமல் எப்படி கட்டுமானப் பணிகளை துவங்குவீர்கள் எனவும் கேள்வி எழுப்பியுள்ளார். அப்போது, ஆத்திரமடைந்த எம்.எல்.ஏ பிரபாகரன், முருகானந்தத்தை அடிக்க பாய்ந்து மிரட்டல் விடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. 

இதில் முருகானந்தமும் அவரது ஆதரவாளர்களும் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது எம்.எல்.ஏ.பிரபாகரன் நீ அதிமுக, உனக்கு நான் பதில் கூற முடியாது, ஊராட்சி தலைவரிடம் போய் விவரங்களை கேட்டுக்கொள் என ஆத்திரமாக தெரிவித்தார். இதனால் அப்பகுதியில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. இந்நிலையில், சம்பவம் தொடர்பான காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow