திமுக எம்.எல்.ஏ மகன்,மருமகள் இனி சிறையில் தானா?...சிக்கலில் சிறை தம்பதி!
பணிப்பெண் கொடுமைப்படுத்தியதாக தொடரப்பட்ட வழக்கில் திமுக எம்.எல்.ஏவின் மகன் ஆண்டோ மதிவாணன் மற்றும் மருமகள் மெர்லினாவுக்கு ஜாமின் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
சென்னை, பல்லாவரம் திமுக சட்டமன்ற உறுப்பினர் கருணாநிதியின் மகனான ஆன்டோ மதிவாணன் - மெர்லினா தம்பதி திருவான்மியூரில் வசித்து வந்த நிலையில், அவர்களது வீட்டில் கள்ளக்குறிச்சியை சேர்ந்த 17 வயது சிறுமி ஒருவர் வீட்டு வேலைக்காக சேர்ந்துள்ளார்.
இந்நிலையில் ஆண்டோ மதிவாணனும், மருமகள் மெர்லினாவும் தன்னை கொடூரமாக தாக்கியதாகவும், கொடுமைப்படுத்தியதாகவும் அந்த சிறுமி பகிரங்க குற்றச்சாட்டை முன்வைத்தார். இதுகுறித்த வீடியோ காட்சிகளும் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், சிறுமியின் தாயார் அளித்த புகாரின் பேரில் ஆண்டோ - மெர்லினா தம்பதி மீது இந்திய தண்டனைச் சட்டம், வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. தொடர்ந்து இருவரும் தலைமறைவாகிய நிலையில் பெங்களூருவில் வைத்து அவர்களை தனிப்படை காவல்துறையினர் கைது செய்தனர்.
தொடர்ந்து இருவரும் புழல் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், அவர்களது நீதிமன்ற காவலை பிப்ரவரி 23 ஆம் தேதிவரை நீட்டித்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதன்படி இன்றுடன் (23.02.2024) ஆண்டோ மதிவாணன் - மெர்லினா தம்பதியின் நீதிமன்ற காவல் நிறைவடைந்த நிலையில், மார்ச் 7ஆம் தேதி வரை காவலை நீட்டித்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
What's Your Reaction?