மார்க்சிஸ்ட் வாசுகி வதந்தி பரப்புவதா? கொந்தளித்த ஆர்எஸ்எஸ்.. நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வலியுறுத்தல்

ஆர்எஸ்எஸ் இயக்கம் பற்றி எந்த வித ஆதாரமும் இன்றி திட்டமிட்டு அவதூறுவை பரப்பும் வாசுகியும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க என்று ராஷ்டிரீய ஸ்வயம் சேவக சங்கம் வலியுறுத்தியுள்ளது.

Apr 8, 2024 - 13:24
மார்க்சிஸ்ட் வாசுகி வதந்தி பரப்புவதா? கொந்தளித்த ஆர்எஸ்எஸ்.. நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வலியுறுத்தல்

இது தொடர்பாக ஆர்எஸ்எஸ் இயக்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆர்எஸ்எஸ் பற்றி ஏராளமான வதந்திகளையும் அவதூறுகளையும் சமூக விரோதிகள் தொடர்ந்து பரப்பி வருகிறார்கள். சங்கம் இதுபோன்ற அவதூறுகளுக்கு பதிலளிப்பது இல்லை என்பதை தங்களுக்கு சாதகமாக்கிக் கொண்டு தொடர்ந்து வெறுப்பு பிரச்சாரத்தில் ஈடுபடுகிறார்கள். 

சமீபத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழு உறுப்பினர் திருமதி வாசுகி, ஆதாரமற்ற ஒரு அவதூறை பரப்பி உள்ளார். டெல்லியில் மூன்றரை லட்சம் சதுர அடியில் 4500 கோடி ரூபாய் செலவில் ஆர்எஸ்எஸ் சங்கத்தின் பிரம்மாண்ட அலுவலகம் கட்டப்படுவதாக பொய்யான பிரச்சாரத்தை வாசுகி ஆரம்பித்துள்ளார்.

இதனை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அதிகாரப்பூர்வ பக்கங்களில் பதிவிட்டுள்ளனர். எந்த வித ஆதாரமும் இன்றி பரப்பப்படும் இந்த பொய்க்குற்றச்சாட்டை வன்மையாகக் கண்டிக்கின்றோம். 

திட்டமிட்டு அவதூறுவை பரப்பும் திருமதி வாசுகியும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்காவிட்டால், ராஷ்டிரிய ஸ்வயம் சேவக் சங்கத்தின் சார்பில் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடருவோம் என்று எச்சரிக்கிறோம் என்று ஆர்எஸ்எஸ் இயக்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow