ராணிப்பேட்டையில் புற்றுநோயாளிகள் எண்ணிக்கை அதிகரிப்புக்கு காரணம் இதுதான்!
தமிழகத்திலேயே ராணிப்பேட்டை மாவட்டத்தில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிக அளவில் உள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியம் அதிர்ச்சிகர தகவல் ஒன்றை தெரிவித்துள்ளார்.
சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் தோல் தொழிற்சாலைகள் மற்றும் சாயப்பட்டறைகள் அதிகம் நிறைந்த மாவட்டங்களில் புற்றுநோய் பாதிப்பு என்பது அதிக அளவில் காணப்படுவதாகவும், இதனை கண்டறிய ராணிப்பேட்டை, ஈரோடு, கன்னியாகுமரி, திருப்பத்தூர் ஆகிய 4 மாவட்டங்களில் புற்று நோய் கண்டறியும் சோதனை அரசு சார்பில் நடத்தி வருவதாக தெரிவித்தார்.
குறிப்பாக ராணிப்பேட்டையில் நடத்தப்பட்ட புற்றுநோய் பரிசோதனையில், 222 பெண்களுக்கு மார்பக புற்றுநோயும், 290 பேருக்கு கருப்பை புற்றுநோயும், 29 நபர்களுக்கு வாய் புற்றுநோயும் இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாகவும், மாநில அரசு அவர்களுக்கு உரிய மருத்துவ வசதிகளையும், சிகிச்சையை அளித்து உயிரை காப்பாற்ற நடவடிக்கை எடுத்து வருவதாக கூறினார்.
What's Your Reaction?