கலைஞர் நூற்றாண்டு பூங்காவில் அமையும் பிரமாண்ட கண்ணாடி பூங்கா!!! சிறப்பம்சங்கள் என்னென்ன?

Feb 24, 2024 - 16:08
Feb 24, 2024 - 18:21
கலைஞர் நூற்றாண்டு பூங்காவில் அமையும் பிரமாண்ட கண்ணாடி பூங்கா!!! சிறப்பம்சங்கள் என்னென்ன?

சென்னையில் அமைய உள்ள கலைஞர் நூற்றாண்டு பூங்காவில் ரூ.14 கோடி செலவில் கண்ணாடி மாளிகை, ட்ரீ டவர் அமைக்க தமிழ்நாடு அரசின் தோட்டக்கலைத்துறை டெண்டர் கோரி உள்ளது.

சென்னை கத்தீட்ரல் சாலையில் அமைய உள்ள கலைஞர் நூற்றாண்டு பூங்காவில் ரூ.7 கோடி செலவில் முழுவதும் குளிரூட்டப்பட்ட வகையில் அமைக்கப்பட உள்ள கண்ணாடி மாளிகையில் வெளிநாடுகளைச் சேர்ந்த பல்வேறு பூக்கள் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதேபோன்று 30 மீட்டர் உயரத்தில் ஒரு ட்ரீட் டவர்  ரூ.7 கோடி செலவில் அமைக்கப்பட உள்ளது. இந்த கோபுரத்தை சுற்றியும் பூக்கள் அமைக்கப்பட உள்ளது. கோபுரத்தின் நடுவில் அமைக்கப்படும் மின் தூக்கியில் பார்வையாளர்கள் சென்று பூக்களை ரசிக்கும் வகையில் வடிவமைக்கப்பட உள்ளது. மேலும் கோபுரத்தின் மேல் பகுதிக்கு சென்று பூங்கா மொத்தத்தையும் பார்த்து ரசிக்கும் வகையில் அமைக்கப்பட உள்ளது.

இந்த 2 பணிகளையும் மேற்கொள்வதற்கான நிறுவனங்களை தேர்வு செய்ய தமிழ்நாடு தோட்டக்கலை துறை தற்போது டெண்டர் கோரி உள்ளது. டெண்டர் தேர்வு செய்யப்பட்ட பின் அடுத்த மூன்று மாதத்திற்குள் இதற்கான பணிகள் தொடங்கும் என்று தோட்டக்கலைத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் படிக்க :

https://kumudam.com/BJP-will-grow-with-Vijayatharani---Annamalai-Hope

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow