”6 மாஜிக்கள்... பச்சைப் பொய்...” – எடப்பாடி பழனிசாமி விளக்கம்! 

அதிமுக முன்னாள் அமைச்சர்கள் தன்னை சந்தித்து பேசியதாக வெளியான தகவல் பொய்யானது என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். 

Oct 17, 2024 - 15:01
”6 மாஜிக்கள்... பச்சைப் பொய்...” – எடப்பாடி பழனிசாமி விளக்கம்! 

துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசுவது அவரது முதிர்ச்சி இன்மையை காட்டுகிறது என்று எடப்பாடி பழனிசாமி காட்டமான விமர்சனத்தை முன்வைத்துள்ளார். 

அதிமுகவின் 53 ஆம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு சென்னை ராயப்பேட்டை எம்ஜிஆர் மாளிகையில் முன்னாள் முதலமைச்சர்களான எம்ஜிஆர் ,  ஜெயலலிதா சிலைகளுக்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மாலையிட்டு மரியாதை செலுத்தினார். இதனைத் தொடர்ந்து கட்சிக் கம்பத்தில் அதிமுக கொடியை ஏற்றிய அவர்,  தொண்டர்களுக்கு இனிப்புகளை வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி, ”அதிமுக பிரிந்து கிடக்கிறது என்ற வார்த்தையே தவறு.. அதிமுக பிரியவில்லை. சிலர் நீக்கப்பட்டனர், அவ்வளவுதான். அதிமுகவில் இருந்து நிர்வாகிகள் நீக்கப்படுவது ஜெயலலிதா காலத்திலேயே இருந்த நடைமுறைதான்.

அதிமுக இணைப்பு குறித்து 6 முன்னாள் அமைச்சர்கள் என்னிடம் பேசுவதாக கூறுவது பச்சைப் பொய். கட்சி விரோத நடடிக்கையால் நீக்கப்பட்டவர்கள் நீக்கப்பட்டதுதான்.

ஆளுநர் செயல்பாடு குறித்து நான் கருத்து கூற முடியாது. கிழக்கு கடற்கரை சாலையில்  திமுகவிற்கு நெருக்கமானவர்கள்  வாங்கி குவித்துள்ள  நிலங்களின் மதிப்பு கூட வேண்டும் என்பதற்காகத்தான் முட்டுக்காட்டில் கருணாநிதி பெயரில் பன்னாட்டு மையத்தை அமைக்கின்றனர் . அரசு பணத்தை வீணடிக்கின்றனர்.

கலைஞர் பன்னாட்டு மையம் அமைப்பதற்கு தேவையான நிலம் நந்தம்பாக்கம் வர்த்தக மையத்திலேயே 16 ஏக்கர் நிலம் காலியாக உள்ளது. நகரத்துக்கு வெளியே 40 கி.மீ தூரத்தில் அமைத்தால்தான் மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்” என்று தெரிவித்தார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow