“யாரையும் கட்சியில் சேர்க்காதீங்க” தவெகவுக்கு தூதுவிடும் விடுதலை சிறுத்தைகள்
'விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இருந்து யார் வந்தாலும், தயவு செய்து சேர்த்துக்கொள்ள வேண்டாம்' என,தமிழக வெற்றிக் கழகத்திற்கு விடுதலை சிறுத்தைகள் தூதுவிட்டு இருப்பதாக தெரிகிறது.
நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் விசிகவின் வாக்குவங்கி முழுவதுமாக தவெக பக்கம் சென்றுவிட்டது. இதனால் விசிக நிர்வாகிகள் பலரும் தங்களது அரசியல் எதிர்காலத்தை மனதில் வைத்து தவெக பக்கம் தாவ தயாராகி வருகின்றனர். இதற்காக தவெக இரண்டாம் கட்ட தலைவர்கள் சந்தித்து கட்சியில் இணைய கடிதம் கொடுத்துள்ளனர்.
இந்த தகவல் விசிக தலைமைக்கு தெரிந்து, கடிதம் கொடுத்த நிர்வாகிகளிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இதனிடையே விசிக நிர்வாகிகள் யாரையும் கட்சியில் சேர்க்க வேண்டாம் என தவெகவிடம் திருமா தூது அனுப்பி இருப்பதாக தெரிகிறது. திருமாவின் சகோதரி மகனும், மாநில செயலருமான இசை அமுதன் உள்ளிட்ட எட்டு மாவட்ட செயலர்கள் தயாராக இருந்தனர். அவர்களை, த.வெ.க.,வைச் சேர்ந்த அமைச்சர் ஆதவ் அர்ஜுனா உதவியுடன் திருமாவளவன் தடுத்து விட்டார்.
இந்த நிலையில், சில நிர்வாகிகள் அறிவாலய கதவை தட்ட தொடங்கி இருக்கிறார். இதில் முதற்கட்டமாக விசிக முன்னாள் எம்எல்ஏ பனையூர் பாபு திமுகவில் இணைந்து இருக்கிறார். மேலும் விசிக எம்எல்ஏக்கள் ஆளுநர் ஷாநவாஸ், எஸ்.எஸ்.பாலாஜி உள்பட பலரை திமுகவில் இணைக்க அறிவாலயம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தெரிகிறது. இந்த தகவலை தெரிந்து கொண்ட திருமா, திமுகவில் இணைவதை தடுக்க ஸ்டாலினிடம் தூதுவிட்டு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
What's Your Reaction?