முழங்கால் வலியிலிருந்து முழு நிவாரணம்.. நவீன எலும்பியல் சிகிச்சையின் வளர்ச்சி..!
முழங்கால் வலிக்கு மூட்டு மாற்று அறுவை சிகிச்சை மட்டுமே தீர்வு அல்ல. ஆரம்ப நிலையில் நவீன மூட்டு பாதுகாப்பு சிகிச்சைகளும், தேவைப்பட்டால் ரோபோடிக் முழங்கால் மாற்று அறுவை சிகிச்சையும் சிறந்த பலனை அளிக்கின்றன.
டாக்டர் கே.எஸ். தீபக்குமார் MBBS, MS (Orthopaedics), MCh (Ortho) காமாட்சி நினைவு மருத்துவமனை. (சான்றளிக்கப்பட்ட Mako Stryker நிபுணர், தலைமை ஆலோசகர், எலும்பியல் அறுவை சிகிச்சை நிபுணர், எலும்பியல் சிகிச்சை துறையில் 23 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் கொண்டவர்.)
வயிற்று வலி, தலை வலி, பல் வலி வராத ஆளில்லை... இந்த வரிசையில் நான்காவதாக சேர்ந்திருப்பது மூட்டு வலி. மற்ற வலிகள் வந்தால் ஓடிப்போய் பாக்டரை பார்த்து விடலாம். இந்த மூட்டு வலி வந்தால் ஓடவும் முடியாது, நடக்கவும் முடியாது, நிற்கவும் முடியாது, உட்காரவும் முடியாது, படி ஏறவும் முடியாது, இறங்கவும் முடியாது. சில சமயம் பாத்ரூமுக்கே போக முடியாதோ என்கிற பயமே வந்துவிடும். அது வந்து விட்டால் வாழ்க்கையே துயரமாகி விடும்.
இதெல்லாம் அந்தக் காலம். இந்தக் காலத்தில் எதற்கும் பயப்படத் தேவை இல்லை, சரியான மருத்துவமனையையும், சரியான மருத்துவரையும் நாம் தேர்ந்தெடுத்தால் போதும் வலியில்லாத வாழ்க்கைக்கு வழி கிடைத்து விடும்.
இது தெரியாத பலர் மூட்டுவலி பற்றி பொதுவாக நிலவும் அபிப்பிராயங்களை முடிவானதாக நம்பி, முழங்கால் வலி ஏற்பட்டால் அதற்கான ஒரே தீர்வு முழங்கால் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை என்று பயப்படுகின்றனர். ஆனால், நவீன எலும்பியல் மருத்துவம் அதைவிடப் பல்வேறு சிகிச்சை வாய்ப்புகளை வழங்குகிறது. இன்று, இயற்கையான மூட்டினை முடிந்தவரை நீண்ட காலம் பாதுகாப்பதிலும், உண்மையில் அவசியமான சூழ்நிலையில் மட்டுமே மூட்டு மாற்று அறுவை சிகிச்சையைத் தேர்வு செய்வதிலும் கவனம் செலுத்தப்படுகிறது.
மூட்டு வாதத்தின் ஆரம்பக் கட்டங்களில், ஆரோக்கியமான குருத்தெலும்பு (Cartilage) இன்னும் ஓரளவுக்கு நன்றாக இருக்கும் நிலையில், மூட்டு பாதுகாப்பு சிகிச்சைகள் வலியைக் குறைக்கவும், இயக்கத்திறனை மேம்படுத்தவும், சேதத்தின் வேகத்தை மெதுவாக்கவும் உதவுகின்றன.
நோயாளியின் உடல் நிலையைப் பொறுத்து உடற்பயிற்சி சிகிச்சை (Physiotherapy), உடல் எடைக் கட்டுப்பாடு, PRP (Platelet-Rich Plasma) , ஹையாலுரோனிக் அமில ஊசிகள் (Hyaluronic Acid Injections), ஸ்டெம் செல் சிகிச்சை மற்றும் குறைந்த காயத்துடன் செய்யப்படும் ஆர்த்ரோஸ்கோபிக் (Arthroscopic) அறுவை சிகிச்சைகள் என பல்வேறு சிகிச்சைகள் வந்துவிட்டன.
இந்தச் சிகிச்சைகளின் நோக்கம் வெறுமனே அறுவை சிகிச்சையைத் தவிர்ப்பது மட்டுமல்ல; நோயாளிகள் சுறுசுறுப்பான மற்றும் சுயாதீனமான வாழ்க்கை முறையைத் தொடர உதவுவதாகும். சரியான நேரத்தில் மேற்கொள்ளப்படும் சிகிச்சை மற்றும் தொடர்ச்சியான கண்காணிப்பு மூலம், பல நோயாளிகள் பல ஆண்டுகள் தங்களின் அன்றாட செயல்பாடுகளை சிரமமின்றி மேற்கொள்ள முடிகிறது.
எனினும், மூட்டுவாதம் என்பது காலப் போக்கில் முன்னேறும் ஒரு நிலையாகும். குருத்தெலும்பு இழப்பு கடுமையாகி, நடப்பது, படிக்கட்டுகளில் ஏறுவது, இறங்குவது அல்லது அன்றாடப் பணிகளைச் செய்வது போன்றவற்றில் பாதிப்பை ஏற்படுத்தும்போது, முழங்கால் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை மிகவும் பயனுள்ள தீர்வாக இருக்கலாம். இதை மூட்டு பாதுகாப்பு சிகிச்சையின் தோல்வியாகக் கருத வேண்டியதில்லை. மாறாக, இது சிகிச்சையின் அடுத்த கட்டமாகும்.
தொழில்நுட்ப முன்னேற்றங்கள் முழங்கால் மூட்டு மாற்று அறுவை சிகிச்சையையும் புதிய நிலைக்குக் கொண்டு சென்றுள்ளன. 'Mako Stryker' போன்ற ரோபோடிக் உபகரணங்கள் அறுவை சிகிச்சையை மிகுந்த துல்லியத்துடனும் திட்டமிடலுடனும்மேற்கொள்ள அறுவை சிகிச்சை நிபுணர்களுக்கு உதவுகின்றன. இதன் மூலம், ஆரோக்கியமான எலும்புகள் மற்றும் சுற்றியுள்ள திசுக்களை அதிகளவில் பாதுகாத்தபடி, செயற்கை மூட்டு பொருத்துதலை மிகவும் துல்லியமாகச் செய்ய முடிகிறது.
நோயாளிகள் புரிந்துகொள்ள வேண்டிய முக்கியமான செய்தி என்னவென்றால், மூட்டு பாதுகாப்பு சிகிச்சையும் ரோபோடிக் மூட்டு மாற்று அறுவை சிகிச்சையும் ஒன்றுக்கொன்று போட்டியிடும் முறைகள் அல்ல. அவை நவீன எலும்பியல் சிகிச்சையின் ஒன்றை ஒன்று பூர்த்தி செய்யும் வெவ்வேறு கட்டங்களாகும். சரியான நேரத்தில் சரியான சிகிச்சையைத் தேர்வு செய்வதன் மூலம், நோயாளிகள் தங்களின் இயக்கத் திறன், சுயாதீனம் மற்றும் தன்னம்பிக்கையைத் தக்க வைத்துக்கொண்டு, குடும்பம், வேலை, பயணம் மற்றும் வாழ்க்கைக்கு அர்த்தம் தரும் செயல்பாடுகளை தொடர்ந்து அனுபவிக்க முடியும்.
மூட்டு பாதுகாப்பு சிகிச்சை மற்றும் ரோபோடிக் முழங்கால் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை குறித்த ஆலோசனைக்கு, டாக்டர் காமாட்சி நினைவு மருத்துவமனை ஆர்த்ரோபோட்டிக்ஸ் (Arthrobotics) ஆலோசகரை தொடர்புக் கொள்ளவும்: 8939 000 900
What's Your Reaction?