தங்கம் வாங்குபவர்களுக்கு ஷாக்..புதிய உச்சத்தை தொட்ட சவரன்!

இன்று சென்னையில் தங்கம் வெள்ளி விலை உயர்ந்துள்ளது.

Jul 22, 2026 - 10:29
தங்கம் வாங்குபவர்களுக்கு ஷாக்..புதிய உச்சத்தை தொட்ட சவரன்!
Gold Rate Today

சர்வதேச பொருளாதார சூழல் போர் பதற்றம்  காரணமாக தங்கம் விலை ஏற்ற இறக்கத்தை சந்தித்து வருகிறது. இதனால் தங்கத்தின் நிலை கடந்த ஒரிரு நாட்களாக  ஏற்றமும் இறக்கமுமாக உள்ளது.

இந்நிலையில் சென்னை தங்கத்தின் விலை நேற்று முன்தினம் (20.07.2026)  ரூ 13,150 க்கும், சவரன் ரூ 1,05,200 க்கும், விற்பனையானது. நேற்று (21.07.2026) கிராமுக்கு ரூ 70 உயர்ந்து ரூ 13,220 க்கும், சவரனுக்கு ரூ 560 உயர்ந்து ரூ 1,05,760 க்கும் விற்பனையானது.

அதனைத் தொடர்ந்து சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ 1,680 உயர்ந்து ரூ 1,07,440 க்கும், கிராமுக்கு ரூ 210 உயர்ந்து ரூ 13,430க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 

தங்கம் விலை போல வெள்ளி விலையும் இன்று உயர்ந்துள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.5 உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.245-க்கும், பார் வெள்ளி 2,45,000 க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow