நகை பிரியர்களுக்கு ஷாக்! மீண்டும் உச்சம் தொட்ட தங்கம் விலை...
தங்கம் விலை தொடர்ந்து மூன்று நாட்களாக அதிகரித்து வரும் நிலையில் இன்று மேலும் உயர்ந்துள்ளது.
தங்கம் விலை ஏற்ற இறக்கத்தை சந்தித்து வரும் நிலையில் சென்னையில் நேற்று முன்தினம் (21.07.2026) கிராமுக்கு ரூ 70 உயர்ந்து ரூ 13,220க்கும் ,சவரனுக்கு ரூ 560 உயர்ந்து ரூ 1,05,760க்கும் விற்பனையானது.
அதனைத் தொடர்ந்து நேற்று (22.07.2026) சவரனுக்கு ரூ 1680 உயர்ந்து ரூ 1,07,440க்கும் , கிராமுக்கு ரூ 210 உயர்ந்து ரூ 13,430க்கும் விற்பனையானது.
இந்நிலையில் இன்று சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ 560 உயர்ந்து ரூ1,08,000 க்கும், கிராமுக்கு ரூ 70 உயர்ந்து ரூ 13,500க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலையில் எந்தவொரு மாற்றமும் இல்லாமல் ஒரு கிராம் வெள்ளி ரூ 245க்கும் பார் வெள்ளி 2,45,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
What's Your Reaction?