"தேர்தலை புறக்கணிக்க கூடாது, அதிகாரிகள் உங்களோட பேச தயார்" .. சத்யபிரதா சாகு சொல்வதென்ன ?
சமீபத்தில் கூட சில கிராமங்களில் பொதுமக்கள், தேர்தலை புறகணிக்கப்போவதாக அறிவித்து இருந்தனர். அதைதொடர்ந்து கட்சி தலைவர்கள், அரசு அதிகாரிகள் நேரில் சென்று சமாதானம் பேசினர்.
தேர்தலை புறக்கணிக்கிறோம் என்று யாராவது அறிவித்தால் அவர்களிடம் மாவட்ட தேர்தல் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்துவார்கள் என்று தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய, தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு, நாடாளுமன்ற மக்களவை தேர்தலை முன்னிட்டு இதுவரை 57%, அதாவாது 3.60 கோடி பூத் சிலீப் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். அதே சமயம் வரும் 13ஆம் தேதிக்குள் இந்தப் பணிகளை முடிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
தமிழகத்தில் 1.07 லட்சம் அரசு ஊழியர்கள், 50,719 காவல் துறையினர் என்று மொத்தம் 1.59 லட்சம் பேர் தபால் அளிக்க விண்ணப்பம் அளித்துள்ளனர் என்றும், தேர்தல் பணி சான்று பெற்று வாக்காளிக்க 1.97 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளதாகவும் தெரிவித்தார்.
அதோடு, முதியோர்கள் 82,666 பேர், மாற்றுத்திறனாளிகள் 50,665 பேர் தபால் வாக்கு அளிக்க விண்ணப்பம் அளித்துள்ளதாகவும் குறிப்பிட்டார். வாக்குப்பதிவு எந்திரங்களில் வேட்பாளர் பெயர் மற்றும் சின்னம் ஒட்டும் பணிகள், அடுத்த 3 அல்லது 4 நாட்களில் முடிக்க அறிவுறுத்தப்பட்டிருக்கிறது என்றும் கூறினார்.
மேலும், தேர்தல் புறக்கணிப்பு குறித்த அறிவிப்புகள் ஏதாவது வந்தால், நேரில் சென்று மக்களிடம் மாவட்ட தேர்தல் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி அனைவரையும் வாக்களிக்க வைக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
சமீபத்தில் கூட சில கிராமங்களில் பொதுமக்கள், தேர்தலை புறகணிக்கப்போவதாக அறிவித்து இருந்தனர். அதைதொடர்ந்து கட்சி தலைவர்கள், அரசு அதிகாரிகள் நேரில் சென்று சமாதானம் பேசியது குறிப்பிடத்தக்கது
What's Your Reaction?