பாமகவில் இருந்து நீக்கம் : ஜி.கே.மணி எம்எல்ஏ பதவிக்கு வேட்டு வைக்க அன்புமணி திட்டம்
பாமக கெளரவ தலைவர் பதவி இருந்து ஜி.கே.மணி நீக்கப்படுவதாக அன்புமணி அறிவித்துள்ளார். இதை தொடரந்து எம்எல்ஏ பதவியை பறிக்கவும் அன்புமணி திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.
கட்சிக்கு விரோதமாக செயல்படுவதால் பாமகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து உங்களை ஏன் நீக்கக்கூடாது? என பாமக எம்எல்ஏ., ஜி.கே.மணிக்கு கடந்த 18-ம் தேதி அக்கட்சியின் ஒழுங்கு நடவடிக்கை குழு நோட்டீஸ் அனுப்பி இருந்தது. 7 நாட்களுக்கு விளக்க அளிக்க வேண்டும் எனவும் நோட்டீசில் குறிப்பிடப்பட்டு இருந்தது.
ஆனால், அன்புமணி தரப்பு அனுப்பிய நோட்டீசுக்கு ஜி.கே.மணி எந்த விளக்கமும் அளிக்கவில்லை. இந்நிலையில், பாமக கெளரவ தலைவர் பதவியிலிருந்து ஜி.கே.மணி நீக்கப்படுவதாக அன்புமணி அறிவித்துள்ளார்.
அன்புமணியுடன் எந்த கட்சியும் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தக் கூடாது என ராமதாசு அறிவித்து இருந்தார். அதுமட்டுமின்றி ராமதாசு தரப்பு பொதுக்குழுவிற்கு அனுமதி தரக்கூடாது என அன்புமணி தரப்பு போலீசாருக்கு மனு அளித்துள்ளனர். இதனால் இருதரப்புக்கும் இடையேயான மோதல் உச்சகட்டத்தை எட்டியுள்ளது.
இந்நிலையில் தான் ஜி.கே.மணியை கட்சியிலிருந்து அன்புமணி நீக்கியுள்ளார். ஜி.கே.மணி தற்போது பொன்னாகரம் தொகுதி பாமக சட்டமன்ற உறுப்பினராக உள்ளார். கட்சி தாவல் தடை சட்டத்தின் கீழ் அவரது எம்எல்ஏ பதவியை பறிக்க வேண்டும் என சபாநாயகருக்கு அன்புமணி தரப்பு கடிதம் அளிக்க உள்ளதாகவும் தெரிகிறது.
What's Your Reaction?

