Gold rate Today: புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை..சம்பள கவர் பத்திரம்

தங்கத்தின் விலையானது இதுவரை இல்லாத அளவில் கிடுகிடுவென உயர்ந்து புதிய உச்சத்தை தொட்டுள்ளது. சென்னையில் 22 கேரட் மதிப்புள்ள சவரன் விலையானது 67,000-த்தை தாண்டியது.

Mar 31, 2025 - 10:06
Gold rate Today: புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை..சம்பள கவர் பத்திரம்
gold rate at chennai

இந்திய பங்குச் சந்தைகள் எல்லாம் வரலாறு காணாத அளவிற்கு வீழ்ச்சியினை சந்தித்து வரும் நிலையில், முதலீட்டாளருக்கு வருமானத்தையும், நிம்மதியையும் தரும் ஒரே விஷயமாக இருப்பது தங்கம் தான். இந்தியாவில் குறிப்பாக தென் இந்தியாவில் தங்கத்தில் முதலீடு செய்யும் பழக்கம் பெண்களிடத்தில் அதிகமாக உள்ளது என்கிறது புள்ளி விவரங்கள்.

கடந்த ஒரிரு மாதங்களாகவே விண்ணை முட்டும் அளவிற்கு தங்கத்தின் விலை ஏறி வருகிறது. கொஞ்சம் ஆறுதல் அளிக்கும் வகையில், வாரத்திற்கு ஒரு முறை , இரு முறை இறக்கம் கண்டது தங்கத்தின் விலை. ஆனால், கடந்த வாரத்தில் மட்டும் நாட்களாக தங்கத்தின் விலை 5 நாட்கள் தொடர்ந்து அதிகரித்து அதிர்ச்சியளித்தது. வாரத்தின் முதல் நாளான இன்று ஒரே நாளில் கிராமுக்கு ரூ.65 வரை அதிகரித்து ஷாக் கொடுத்துள்ளது.

சென்னையில் தங்கத்தின் விலை என்ன?

நேற்றைய தினம் சென்னையில், 22 கேரட் மதிப்புள்ள ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.8,360 ஆக விற்ற நிலையில் இன்று ஒரே நாளில் கிராமுக்கு ரூ.65 வரை அதிகரித்து ரூ.8,425 ஆக விற்பனையாகிறது. தொடர்ந்து அதிகரித்து வரும் தங்கத்தின் விலையானது நடுத்தர வர்க்க மக்களிடையே கவலையினை உண்டாக்கியுள்ளது. சவரனுக்கு ரூ.520 வரை அதிகரித்து சென்னையில் இன்று ஒரு சவரன் ரூ.67,400 ஆக விற்பனையாகிறது.

தொடர்ந்து அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்து வருவதும் தங்கத்தின் விலை உயர்வுக்கு காரணமாக கருதப்படுகிறது. தங்கத்தின் விலை தொடர்ந்து இனி வரும் காலங்களில் அதிகரிக்கவே வாய்ப்புள்ளதாக பொருளாதார நிபுணர்களால் கணிக்கப்பட்டுள்ளது.

தங்கத்தின் விலை ஒருபக்கம் அதிகரித்துள்ள நிலையில், வெள்ளியின் விலையானது நேற்றைய விலையுடன் ஒப்பிடுகையில் எவ்வித மாற்றமும் இல்லை. 1 கிராம் வெள்ளி ரூ.113 ஆக சென்னையில் தற்போது விற்பனையாகிறது என்பது குறிப்பிடத்தக்கது. தங்கத்தின் விலையானது கற்பனையின் எல்லைகளை மீறி அதிகரித்து வருவது நடுத்தர வர்க்க மக்களிடையே கவலையினை உண்டாக்கியுள்ளது.

Read more: 6 கோடிக்கும் அதிகமான தெரு நாய்கள்.. பிரதமரை சந்தித்து கோரிக்கை வைத்த MP கார்த்தி சிதம்பரம்

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow