சட்டவிரோத பணப் பரிமாற்றம் - ரியல் எஸ்டேட் அதிபர் வீட்டில் சோதனை

Feb 23, 2024 - 15:35
சட்டவிரோத பணப் பரிமாற்றம் - ரியல் எஸ்டேட் அதிபர் வீட்டில் சோதனை

சட்டவிரோத பணப் பரிமாற்றம், வெளிநாடுகளில் முதலீடு  உள்ளிட்ட குற்றச்சாட்டின் அடிப்படையில் இன்டர்நேஷனல் டிரேடிங் லிங்க் என்ற நிறுவனம் தொடர்புடைய, சென்னை மற்றும் புறநகர் பகுதியில் சுமார் 10 இடங்களில் அமலாகத்துறையினர் அதிரடி சோதனையை மேற்கொண்டுள்ளனர். 

மும்பையை தலைமை இடமாகக் கொண்டு இன்டர்நேஷனல் டிரேட் லிங்க் நிறுவனம் செயல்படுகிறது. இந்நிறுவனத்தின் கிளைகள் டெல்லி, பரோடா, கொச்சின், திருச்சி மற்றும் சென்னையில் உள்ளது. இந்த நிலையில் சட்டவிரோத பணப் பரிமாற்றம், வெளிநாடுகளில் முதலீடு உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் எழுந்ததால் சென்னை எழும்பூர் ஆதித்தனார் சாலையில் உள்ள அந்நிறுவனத்திற்கு சொந்தமான அலுவலகத்தில் அமலாக்கத் துறை அதிகாரிகள் 6 பேர் சோதனை மேற்கொண்டனர். 

இதேபோல் திருவிக நகர், காமராஜர் நகரில் ரியல் எஸ்டேட் அதிபர் டேனியல் செல்வகுமார், என்பவர் வீட்டிலும் சோதனை நடைபெறுகிறது. டெல்லியில் இருந்து அமலாக்கத் துறையின்  செயல் இயக்குனர் ராகுல் நவீன் சென்னையில் நேற்று அதிகாரிகளுடன் நடத்திய ஆலோசனையில் நிலுவை வழக்குகள், புதிய வழக்குகள் தொடர்பாக நடவடிக்கையை முடுக்கிவிட உத்தரவிட்டதாக கூறப்படுகிறது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow