ஏழைகளுக்காக அல்ல, ஒரு குடும்பத்தின் நலனுக்காகவே I.N.D.I.A கூட்டணி உழைக்கிறது - பிரதமர் மோடி குற்றச்சாட்டு
I.N.D.I.A கூட்டணிக் கட்சிகள் ஏழைகளுக்காக அல்லாமல், ஒரு குடும்பத்தின் நலனுக்காக மட்டுமே உழைப்பதாக பிரதமர் நரேந்திர மோடி விமர்சித்துள்ளார்.
நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில், தனது சொந்தத் தொகுதியான வாரணாசிக்கு பிரதமர் நரேந்திர மோடி சென்றார். முன்னதாக முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் அவரை வரவேற்ற நிலையில், இருவரும் ஷிவ்பூர்-புல்வாரியா-லஹர்தரா சாலை மேம்பாலத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். தொடர்ந்து துறவி குரு ரவிதாசின் 647-வது பிறந்தநாள் கொண்டாட்ட நிகழ்வில் பங்கேற்ற பிரதமர் நரேந்திர மோடி, அவரது சிலையைத் திறந்து வைத்தார்.
தொடர்ந்து நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர், பிற்படுத்தப்பட்டோர், ஏழைகளின் நலன் என்ற பெயரில் ஒரு குடும்பத்துக்காக மட்டுமே I.N.D.I.A கூட்டணி உழைப்பதாக விமர்சித்தார். சாதியின் பெயரிலான பிரிவினைகளை மட்டும் நம்பும் I.N.D.I.A கூட்டணிக் கட்சியினர், பாஜகவின் மக்கள் நலத்திட்டங்களை எதிர்ப்பதாகவும் குற்றம்சாட்டினார். தேசநலனுக்கான பாஜக, மக்கள் நலத்திட்டங்களை எப்போதும் உரிய பயனாளிகளிடம் கொண்டு சேர்ப்பதாகவும் அவர் கூறினார்.
What's Your Reaction?