சாதிவெறியால் இளம்பெண்ணுக்கு நேர்ந்த அநீதி.. காவல்துறை கைவிட்ட பெண்ணுக்கு நீதி கிடைக்குமா?..

Apr 1, 2024 - 18:37
சாதிவெறியால் இளம்பெண்ணுக்கு நேர்ந்த அநீதி.. காவல்துறை கைவிட்ட பெண்ணுக்கு நீதி கிடைக்குமா?..

சாதியை காரணம் காட்டி திருமணம் செய்ய மறுத்த காதலனுக்கு ஆதரவாக செயல்படுவதாக கூறப்படும் காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பாதிக்கப்பட்ட பெண் சென்னை காவல் ஆணையரிடம் புகார் அளித்துள்ளார். 

ஆந்திராவின் பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்த 25 வயதுப்பெண்ணும், மலைராஜன் என்பவரும் 8 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். ஆனால் தற்போது  சாதியை காரணம் காட்டி, காதலன் மலைராஜன் தன்னை திருமணம் செய்ய மறுப்பதாக அப்பெண் குற்றம்சாட்டியுள்ளார். மலைராஜனுடன் நெருங்கிப் பழகியதில், தான் கர்ப்பமடைந்தாகவும் ஆனால் தன்னை அவர் மிகவும் கொடுமைப்படுத்தி கருக்கலைப்பு செய்ய வைத்ததாகவும் பாதிக்கப்பட்ட பெண் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார். 

இந்த விவகாரம் தொடர்பாக சென்னை செயிண்ட் தாமஸ் மவுண்ட் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தும் சரியான நடவடிக்கை எடுக்கவில்லை குற்றஞ்சாட்டியுள்ள பாதிக்கப்பட்ட பெண், 
சாதி பற்றி பேசியே தன்னை மலைராஜன் திருமணம் செய்ய மறுத்த நிலையில், காவல்நிலையத்தில் இதை வழக்காக பதிவு செய்யவில்லை எனவும், மேலும் மலைராஜன் தன்னிடம் இருந்து ரூ.20 லட்சம் ஏமாற்றிவிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

செயின்ட் தாமஸ் மவுண்ட் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் ஜெயசித்ரா கலாதேவி மற்றும் உதவி ஆணையர் முரளி ஆகியோர், பாதிக்கப்பட்ட தனக்கு நியாயம் கிடைக்க நடவடிக்கை எடுக்காமல், காதலன் தரப்புக்கு ஆதரவாக  செயல்படுவதாக  புகார் கூறியுள்ள அப்பெண்,இவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சென்னை மாநகர காவல் ஆணையரிடம் அவர் புகார் அளித்துள்ளார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow