"விடியா ஆட்சி - உங்கள் வீட்டு Bill-லே சாட்சி" தலைப்பில் தீவிர தேர்தல் பிரச்சாரம்: அதிமுகவினருக்கு எடப்பாடி உத்தரவு

சட்டமன்ற தேர்தலையொட்டி திமுக ஆளும் அரசை அட்டாக் செய்யும் வகையில், "விடியா ஆட்சி - உங்கள் வீட்டு Bill-லே சாட்சி" தலைப்பில் தீவிர தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கட்சியினருக்கு உத்தரவிட்டுள்ளார். 

"விடியா ஆட்சி - உங்கள் வீட்டு Bill-லே சாட்சி" தலைப்பில் தீவிர தேர்தல் பிரச்சாரம்: அதிமுகவினருக்கு எடப்பாடி உத்தரவு
தீவிர தேர்தல் பிரச்சாரம்: அதிமுகவினருக்கு எடப்பாடி உத்தரவு

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்:  "கமிஷன், கலெக்ஷன், கரப்ஷன்” என ஊழலில் ஊறித் திளைத்துள்ள விடியா திமுக ஆட்சியில், மின்சாரக் கட்டணத்தினாலும், சொத்து வரி மற்றும் பல்வேறு வரிச் சுமையாலும், விண்ணை முட்டும் விலைவாசி உயர்வாலும், கடந்த ஐந்து ஆண்டுகளாக மக்கள் படும் இன்னல்களை வீடுதோறும் கொண்டு சேர்க்கும் பொருட்டு இன்று முதல், 

அமைப்பு ரீதியாக செயல்பட்டு வரும் 82 மாவட்டக் கழகங்களும், தகவல் தொழில்நுட்பப் பிரிவும் இணைந்து, விடியா திமுக ஆட்சிக்கு எதிராக, "விடியா ஆட்சி உங்கள் வீட்டு Bill-லே சாட்சி" என்ற தலைப்பில், சட்டமன்றத் தொகுதிகளுக்கு உட்பட்ட ஒவ்வொரு பூத் வாரியாக AIADMK Connect செயலியை பயன்படுத்தி, கையடக்க பிரிண்டர்கள் மூலமாக, மாண்புமிகு அம்மா அவர்களின் நல்லாசியோடு எனது தலைமையில் நடைபெற்ற கழக ஆட்சிக் காலத்தையும்; 

தற்போது நடைபெற்று வரும் விடியா திமுக ஆட்சிக் காலத்தையும் ஒப்பிட்டு, கடந்த ஐந்தாண்டுகளில் விலைவாசி ஏற்றத்தால் மக்களுக்கு ஏற்பட்டுள்ள இழப்புகள் மற்றும் கூடுதல் சுமைகளால், ஒவ்வொரு வீட்டிற்கும் இந்த விடியா திமுக ஆட்சி கொடுத்திருக்கும் Punishment Bill-ஐ, இல்லத்தரசிகள் மற்றும் குடும்பத்தினரின் பார்வைக்கு அச்சிடப்பட்ட பேப்பராக, துல்லியமாக எடுத்துக் கொடுத்து அவர்களிடத்தில் விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ளப்படும்.

இந்த விழிப்புணர்வு பிரச்சாரம் முதற்கட்டமாக மாநகராட்சி, நகராட்சிப் பகுதிகளுக்கு உட்பட்ட பூத் வாரியாகவும்; அதன் தொடர்ச்சியாக, ஒன்றிய, பேரூராட்சிகளுக்கு உட்பட்ட பூத் வாரியாகவும் மேற்கொள்ளப்படும். நிர்வாகத் திறனற்ற இந்த விடியா திமுக ஆட்சியில், மின் கட்டண உயர்வு, பால் விலை உயர்வு, சொத்து வரி உயர்வு, அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு போன்றவைகளால் மக்களுக்கு ஏற்பட்டுள்ள பொருளாதாரச் சுமைகளை விளக்கிச் சொல்லும் இந்தப் பிரச்சார திட்டத்திற்கான முன்னெடுப்பும், அதனைத் தொடர்ந்து களப் பணிகளும் கட்சி நிர்வாகிகள் மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow