கிளாம்பாக்கத்தில் இருந்து அனைத்து பேருந்துகளை இயக்க அரசு நடவடிக்கை

தொழிலாளர்களுடன் பேச்சுவார்த்தை வருகின்ற 19ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் அதன் பிறகு முடிவு எட்டப்படும்

Jan 18, 2024 - 13:05
Jan 18, 2024 - 14:35
கிளாம்பாக்கத்தில் இருந்து அனைத்து பேருந்துகளை இயக்க அரசு நடவடிக்கை

போக்குவரத்து தொழிலாளர்களுடன் பேச்சுவார்த்தை நடைபெற உள்ள நிலையில் அதன் பிறகு அவர்களது கோரிக்கைகள் குறித்து முடிவு எட்டப்படும் என அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தெரிவித்துள்ளார்.

2015ம் ஆண்டு அரியலூர் மாவட்டம் சன்னாசிப்பேட்டை பகுதியில் நடைபெற்ற முற்றுகையிடும் போராட்டத்தில் அப்போதைய குன்னம் தொகுதி எம்எல்ஏவும், தற்போதைய போக்குவரத்துத்துறை அமைச்சருமான சிவசங்கர் கலந்து கொண்டபோது பிரச்சனை ஏற்பட்டு அது கலவரமாக மாறியது. இதில் 9 போலீசார் காயமடைந்தனர். 

இது குறித்து கடலூர் மாவட்டம் ஆவினங்குடி போலீசார் பொது சொத்துக்கு சேதம் விளைவித்தல், பொது அமைதிக்கு பங்கம் விளைவித்தல் உட்பட 8 பிரிவுகளின் கீழ் 37 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.இந்த வழக்கு விசாரணை கடலூர் சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் மீதான வழக்கை விசாரிக்கும் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது போக்குவரத்துதுறை அமைச்சர் சிவசங்கர் உட்பட 29 பேர் நீதிமன்றத்தில் ஆஜராகினர்.

 வழக்கை விசாரணை செய்த நீதிபதி, வழக்கு விசாரணையை அடுத்த பிப்ரவரி மாதம் 14ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.பின்னர் நீதிமன்ற வளாகத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், "தொழிலாளர்களுடன் பேச்சுவார்த்தை வருகின்ற 19ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் அதன் பிறகு முடிவு எட்டப்படும். 

கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் ஒரு வாரத்திற்கு உள்ளாக சிறப்பு கூட்டம் நடத்தப்பட்டு முழுவதுமாக பேருந்துகள் இயக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்" என தெரிவித்தார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow