தமிழ்நாட்டில் பாஜக எம்.பிக்கள் தேர்வாவது உறுதி! அண்ணாமலையின் மாஸ்டர் பிளான்...

என் மண் என் மக்கள் நடைபயணத்தால் நாடாளுமன்றத்துக்கு பாஜகவினர் தேர்ந்தெடுக்கப்படுவது உறுதி

Feb 27, 2024 - 13:31
தமிழ்நாட்டில் பாஜக எம்.பிக்கள் தேர்வாவது உறுதி! அண்ணாமலையின் மாஸ்டர் பிளான்...

‘என் மண், என் மக்கள் ’யாத்திரை மூலம் தமிழ்நாட்டில் இருந்து பாஜகவினர் நாடாளுமன்ற உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை நம்பிக்கை தெரிவித்துள்ளார். 

மக்களவைத் தேர்தல் நெருங்கும் நிலையில் ‘என் மண் என் மக்கள்’ என்ற பெயரில் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை நடைபயணம் மேற்கொண்டார். தொடர்ந்து இதன் நிறைவுவிழாவில் பிரதமர் மோடி உள்ளிட்டோர் பங்கேற்புடன் இன்று(27.02.2024) நடைபெறுகிறது.

இந்நிலையில் திருப்பூரில் உள்ள சுதந்திரப் போராட்ட வீரர் திருப்பூர் குமரனின் நினைவிடத்தில் மரியாதை செலுத்தி அண்ணாமலை தனது நடைபயணத்தை நிறைவு செய்தார். இதையடுத்து கட்சித் தொண்டர்களிடம் பேசிய அவர், லஞ்ச அரசியல்-குடும்ப அரசியல் -அடாவடி அரசியல் வேண்டாம் எனக்கூறி பிரதமர் நரேந்திர மோடியின் அரசியலையே மக்கள் விரும்புவதாகத் தெரிவித்தார். வேல் யாத்திரைக்கு பிறகு தமிழ்நாட்டில் 4 எம்.எல்.ஏக்களை பாஜக பெற்றதைப் போல், என் மண் என் மக்கள் நடைபயணத்தால் நாடாளுமன்றத்துக்கு பாஜகவினர் தேர்ந்தெடுக்கப்படுவது உறுதி என கூறினார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow